VIDEO: என்னங்க நீங்க வந்துட்டீங்க?.. எது பவுலிங் போட போறீங்களா?.. இது வேற ரகம்!.. ரசிகர்களை மிரளவைத்த ரோஹித்!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி தற்போது ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் தற்போது வரை 65 ஓவர்கள் விளையாடி 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை குவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரரான மார்னஸ் லாபுஷேன் சதமடித்து விளையாடி வருகிறார். மேத்யூ வேட் 45 ரன்களுக்கும், ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களுக்கும் ஆட்டம் இருந்து வெளியேறினர். துவக்க வீரர் வார்னர் ஒரு ரன்னிலும், ஹாரிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் 36வது ஓவரின் கடைசி ஒரு பந்தினை இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா வீசினார்.
வழக்கமாகவே ரோகித்சர்மா ஸ்பின் பவுலிங் நாம் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால், இன்றைய போட்டியில் அவர் ஒரு மீடியம் பேசராக ஒரு பந்தினை மட்டும் வீசி விட்டு சென்றார்.
அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரோகித் சர்மாவின் பந்துவீச்சு கண்ட சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அவர் பந்து வீசியதன் காரணம் என்ன என்று பார்க்கையில் 36வது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சைனி தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி பந்தினை வீச முடியாமல் வலியில் துடித்தார்.
மேலும், மைதானத்திற்குள் வந்த பிசியோதெரபி தொடர்ந்து பந்துவீச முடியாது என்று கூறி அவரை அழைத்துச் சென்றுவிட்டார். அதன் காரணமாக அந்த ஓவரின் கடைசி பந்தை வீசி முடிப்பதற்காக ரோகித் சர்மா இந்த பந்து வீசினார்.
Into the attack: Rohit Sharma from the Vulture St End! 🔥
Live #AUSvIND: https://t.co/IzttOVtrUu pic.twitter.com/qHDvLMZCSO
— cricket.com.au (@cricketcomau) January 15, 2021
மற்ற செய்திகள்