'பிளே ஆப்க்கு போகுமா'?... 'நான் செஞ்ச பெரிய தப்பு'... 'மொத்தத்தையும் தலைகீழா மாத்திடுச்சு'... ரோகித் சர்மா சொன்ன காரணம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கெதிரான தோல்வி குறித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

'பிளே ஆப்க்கு போகுமா'?... 'நான் செஞ்ச பெரிய தப்பு'... 'மொத்தத்தையும் தலைகீழா மாத்திடுச்சு'... ரோகித் சர்மா சொன்ன காரணம்!

கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் ஆக்ரோஷமாகக் காணப்படும் அந்த அணிக்கு தற்போது என்ன ஆச்சு என்பது தான் பல ஐபிஎல் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

Rohit Sharma admits after MI’s crushing loss to RCB

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுமா? பெறாதா? என்ற நிலைக்கு வந்துள்ளது தான் சோகத்தின் உச்சம். அதற்கு முக்கிய காரணம் நேற்று நடைபெற்று முடிந்த பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. இனி நடக்கவிருக்கும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணி பிளே ஆப் சுற்றைச் சிந்தித்துப் பார்க்க முடியும்.

இந்நிலையில் தோல்வி குறித்துப் பேசியுள்ள மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ''பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் நிச்சயம் 180 ரன்களை எட்டி விடுவார்கள் என நினைத்தேன். ஆனால் பந்து வீச்சு மூலம் வீரர்கள் சாமர்த்தியமாகக் கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியில் பேட்டிங் பிரச்சனை இருக்கிறது. இதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

Rohit Sharma admits after MI’s crushing loss to RCB

நான் முக்கியமான நேரத்தில் ஒரு மோசமான ஷாட்டை ஆடியது பெரிய தவறு. மேலும் இஷான் கிஷான் ஒரு திறமையான வீரர். அவருக்குத் தேவையான சுதந்திரத்தை நாம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வார். ஐபிஎல் அதற்கான ஒரு நல்ல வழி'' என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்