"மோசமா ஆடுறதயும்... வெளில பேசுறதயும் வெச்சு முடிவு பண்ணாதீங்க"! - கோலி ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு ரோஹித் பதிலடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில், இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இருந்தது.
Also Read | ஆட்டோவை லாரியாக யூஸ் பண்றாரு.. எவ்ளோ பேரை உள்ள ஏத்திருக்காரு பாருங்க.. ஷாக்-ஆன போலீஸ்.. வீடியோ..!
முன்னதாக, முதல் இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது டி 20 போட்டியில், 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் 117 ரன்கள் அடித்த போதும், 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
இந்திய அணி தொடரைக் கைப்பற்றினாலும், சீனியர் வீரரான விராட் கோலி ஃபார்மில் இல்லாமல் இருப்பது பற்றி ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
விமர்சனத்தை சந்திக்கும் கோலி
டி 20 தொடரில் இரண்டு போட்டிகள் ஆடிய கோலி, முறையே 1 ரன் மற்றும் 11 ரன்களை எடுத்திருந்தார். இதனால், இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட போகும் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோலியின் சமீபத்திய ஆண்டுகளில் அவரது ரன் குவிப்பும் சற்று விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
கபில்தேவ், அஜய் ஜடேஜா உள்ளிட்ட பலரும், டி 20 அணியில் கோலிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றும், இந்த வடிவிலான போட்டியில் இளம் வீரர்களை களமிறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
"வெளிய இருந்து பாத்தா.."
இந்நிலையில், கோலியின் ஃபார்ம் குறித்து, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். "ஒரு வீரரின் ஃபார்ம் பற்றி நீங்கள் பேசினால், அனைவருக்கும் தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறது. வீரரின் தரம் இதனால் பாதிக்கப்படுவது இல்லை. இதை எல்லாம் மனதில் வைத்து தான் நாங்களும் முடிவு எடுக்கிறோம். பல ஆண்டுகளாக ஒரு வீரர் சிறப்பாக ஆடினால், தற்போதைய சில தொடர்களில் அவர் மோசமாக ஆடும் போது, அதை வைத்து மட்டும் முடிவு எடுத்து விட முடியாது.
பலரும் ஆட்டத்தை வெளியே இருந்து பார்த்து விட்டு கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், உள்ளே என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாது. நாங்கள் ஒரு அணியை உருவாக்கி, சிந்தனையை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். வீரர்களுக்கு ஆதரவை அளித்து, அவர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுக்கிறோம். இவை அனைத்தும் வெளியே இருந்து பார்க்கும் போது தெரியாது.
வெளியே என்ன பேசுகிறார்கள் என்பதை விட, உள்ளே என்ன நடக்கிறது என்பது தான் எங்களுக்கு முக்கியம். அணியில் உள்ள எங்களுக்கு, வீரர்களின் முக்கியத்துவம் தெரியும். வீரர்களை பற்றி பேச அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதை பற்றி நாங்கள் அதிகம் எண்ணிக் கொள்ளவும் மாட்டோம்" என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்