"இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா, மகேந்திர சிங் தோனி குறித்து பேசியிருக்கிறார்.

"இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவர்கிட்ட காசு இருக்காது.. பால் பாக்கெட் விற்பனை செஞ்சு தான்".. ரோஹித் ஷர்மா குறித்து உருக்கமாக பேசிய ஓஜா..!

ஐபிஎல் 2023

கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது.

ஸ்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.

Images are subject to © copyright to their respective owners.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் தல தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ கூட்டணி எப்போதும் ஸ்பெஷல் தான். பல தாதாவான அணிகளையே ரவுண்டு கட்டி வெற்றியை தங்களது வசமாக்கிய டீம் அது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பதவியை தோனியிடமே ஒப்படைத்தார் ஜடேஜா.

ரோஹித் ஷர்மா

கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் இருந்து தோனி விலகுவாரா? என ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிரிக்கெட் ஜாம்பவான்களும் அவ்வப்போது இதுகுறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவாரா? என கேள்வி எழுப்பப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு பதில் அளித்திருக்கும் ரோஹித் ஷர்மா,"தோனியின் கடைசி சீசன் இதுதான் என்று கடந்த 2-3 வருடங்களாக பலர் கூறியதை கேட்டு வருகிறேன். அவருடைய ஃபிட்னசை பார்க்கும்போது அவர் இன்னும் இரண்டு அல்லது 3 சீசன்களில் விளையாட தகுதியானவர் என நம்புகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

Also Read | "புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா".. ஜடேஜா செஞ்ச சம்பவம்.. வீடியோ..!

CRICKET, ROHIT SHARMA, MS DHONI, MS DHONI RETIREMENT, IPL TOURNAMENT

மற்ற செய்திகள்