‘சொகுசு பங்களாவை பெரிய விலைக்கு விற்ற ஹிட்மேன்’.. எவ்வளவு தொகை தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது வீடு ஒன்றை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘சொகுசு பங்களாவை பெரிய விலைக்கு விற்ற ஹிட்மேன்’.. எவ்வளவு தொகை தெரியுமா..?

இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் கடந்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடியது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது.

Rohit sells his luxurious Lonavala villa for this whopping amount

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இது மிக நீண்ட சுற்றுப்பயணம் என்பதால், கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரும் அவர்களுடன் வர பிசிசிஐ அனுமதித்துள்ளது. டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் அதிக நாட்கள் உள்ளதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இங்கிலாந்தை சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

Rohit sells his luxurious Lonavala villa for this whopping amount

இதனிடையே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தனது வீடு ஒன்றை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனேவில் உள்ள மலைப்பிரதேசமான லொனாவாலா என்ற இடத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு சொந்தமாக ஆடம்பரமான வீடு ஒன்று இருந்தது. இந்த வீட்டை தற்போது ரூ.5.25 கோடிக்கு அவர் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohit sells his luxurious Lonavala villa for this whopping amount

கடந்த மே மாதமே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டதாகும், முன்பணமாக ரூ.26 லட்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது முழு தொகையும் செலுத்தி, சுஷ்மா அசோக் சாரஃப் என்பவர் ரோஹித் ஷர்மாவின் வீட்டை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohit sells his luxurious Lonavala villa for this whopping amount

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும், தாங்கள் சுற்றுலா சென்றால் தங்குவதற்காக அல்லது முதலீடு செய்யும் பொருட்டு பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி வைத்து வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மாவும் விடுமுறை நாட்களில் லொனாவோவில் உள்ள வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்