‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நேரத்தில், மும்பை இந்தியன்ஸ்  அணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே நடைபெற்ற உரையாடல் குறித்து தெரியவந்துள்ளது.

‘இந்திய அணியில் தேர்வு செய்யாததால்’... ‘மனம் உடைந்துப் போன இளம் வீரர்’... ‘ஆறுதல் சொல்லக்கூட நான் போகல’... ‘ஆனா, அவரே வந்து’... ‘ரகசியம் உடைத்த ரோகித் சர்மா’...!!!

சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை மாநில அணியிலும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அதற்கு உதாரணமாக, அவர் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 480 ரன்களுடன் 7-ம் இடத்தை பிடித்தார். ரன்கள் எடுத்ததை காட்டிலும் அவரால் மும்பை அணி சில போட்டிகளில் தோல்வியை வெற்றியாக மாற்றி இருந்தது.

இதனால் சூர்யகுமார் யாதவை, நிச்சயம் பிசிசிஐ இந்திய அணிக்கு தேர்வு செய்யும் என விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்தப்படி ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்கவில்லை. இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய சூர்யகுமார் யாதவ், ‘ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

Rohit reveals conversation with Suryakumar Yadav after India rejection

குறைந்த ஓவர் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே தான் நிறைய ரன்கள் குவித்து வந்ததாகவும், ஐபிஎல் மட்டுமில்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் தான் சிறப்பாக ரன் குவித்ததையும் சுட்டிக் காட்டினார்’ சூர்யகுமார் யாதவ். இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டு இருந்ததாகவும், தேர்வு பற்றி சிந்திக்காமல் இருக்க தான் முயற்சி செய்து வந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால், அணித் தேர்வு பற்றி அறிந்த போது தன்னால் உடற்பயிற்சிகளை கூட செய்ய முடியாமல் ஏமாற்றத்தில் தவித்ததாக கூறினார். இந்திய அணியில் எந்த இடத்திலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என தான் எண்ணி வருந்தியதாகவும், அன்றைய இரவு உணவு கூட உண்ணாமல், யாரிடமும் பேசாமல், தனிமையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார் சூர்யகுமார் யாதவ். இந்நிலையில், இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்படாத நேரத்தில், என்ன நடந்தது என்பது குறித்து, ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Rohit reveals conversation with Suryakumar Yadav after India rejection

‘'நாங்கள் எங்கள் அணி (மும்பை இந்தியன்ஸ்) அறையில் உட்கார்ந்திருந்தோம். இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் செய்யப்படாததால், அவர் மனச்சோர்வடைந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் நான் அவரிடம் சென்று பேசவில்லை. பின்னர் அவரே வந்து, ‘கவலைப்பட வேண்டாம், நான் எல்லாவற்றையும் மீறி மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெறுவேன்’ என சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இதைக் கேட்டதும், ஐபிஎல் அடிப்படையில் மட்டுமல்லாமல், அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் அவர் சரியான திசையில் செல்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். இந்தியாவில் நிறைய உள்ளூர் போட்டிகள் நிறைய உள்ளன. அவருடைய நேரம் வரும். அப்போது அவர் சாதிப்பார். இந்த தத்துவம் தான் எனக்கும் நடந்திருக்கிறது'’ என்று ரோகித் தெரிவித்தார்.

Rohit reveals conversation with Suryakumar Yadav after India rejection

இந்த சம்பவத்திற்கு பின்பு நடந்த அடுத்த ஐபிஎல் போட்டியில் தான், இந்திய அணி கேப்டன் கோலியின் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக மும்பை அணியை வெற்றி பெற வைத்தார். அந்தப் போட்டியில் கோலி - சூர்யகுமார் இடையே சீண்டல்கள் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அணியில் தேர்வு செய்யாததால், கோலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்டது கூறப்பட்டது. சில நாட்கள் முன்பு கோலியை பேப்பர் கேப்டன் என கூறி இருந்த மீமை அவர் லைக் செய்ததும் சர்ச்சை ஆனது. பின்னர் அவர் அதை டிஸ்லைக் செய்தார். 

மற்ற செய்திகள்