"என்ன தான்யா நடக்குது 'இந்தியன்' 'டீம்'ல??..." ரோஹித் பண்ண ஒரே விஷயத்தால... மீண்டும் வெடித்த 'சர்ச்சை'..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடைசி லீக் போட்டியில் இன்று மும்பை அணி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஏற்கனவே மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியைப் பொறுத்தே நான்காவது அணி எது என்பது தெரிய வரும். இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்த மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மா, இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இது தற்போது மிகப் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. காரணம், ரோஹித்தின் காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. ஆனால், மறுநாளே மும்பை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை பதிவு செய்திருந்தது.
இதனால் இந்திய அணியில் இருந்து அவரை வேண்டுமென்றே தான் புறக்கணித்தார்களா என தகவல் பரவி கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகச் சிறந்த வீரரை ஏன் அணியில் இருந்து ஒதுக்கினார்கள். அதற்கு பின் கோலி இருக்கிறாரா என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தது.
இதனிடையே, இன்றைய போட்டியில் அவர் களமிறங்கவுள்ள நிலையில், இனிமேல் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதா என்றும், அப்போது வேண்டுமென்று தான் இந்திய அணியில் இருந்து அவரை ஒதுக்கியுள்ளனர் என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர். ஏற்கனவே ரோஹித் அணியில் தேர்வாகாமல் போனது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இன்று அவர் களமிறங்கியுள்ளது இந்திய அணியின் தேர்வுக் குழு மீது கேள்விகளை எழுப்பியுள்ளது.
மற்ற செய்திகள்