கோப்பையை என் கையில் கொடுத்துட்டு ‘ரோஹித்’ சொன்ன விஷயம் இதுதான்.. இளம் வீரர் நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றதும் கோப்பையை கையில் கொடுக்கும் போது ரோஹித் ஷர்மா கூறிய வார்த்தை குறித்து வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக நடந்த ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்திய அணியில் விளையாட அவருக்கு இடம் கிடைத்தது.
இந்த தொடரை வென்று கோப்பையை வாங்கியதும் கேப்டன் ரோஹித் ஷர்மா நேராக வெங்கடேஷ் ஐயரிடம் கொடுத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் குறித்து வெங்கடேஷ் ஐயர் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘நான் இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து கேப்டன் ரோஹித் ஷர்மா எனக்கு ஊக்கம் அளித்து கொண்டே இருந்தார். அதுமட்டுமில்லாமல் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதும் கோப்பையை வாங்கியவுடன் நேராக என்னிடம் வந்து கொடுத்தார். அப்போது ‘ஆல் தி பெஸ்ட் வெல்டன்’ எனக்கூறி பாராட்டிவிட்டு சென்றார்’ என வெங்கடேஷ் ஐயர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் தொடர்களில் இந்திய அணியில் நான் எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். என்னிடம் பேட்டிங், பவுலிங் என எதை கேட்டாலும் அதை செய்ய தயாராகவே இருக்கிறேன்’ என வெங்கடேஷ் ஐயர் கூறினார்.
மற்ற செய்திகள்