Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

முடிவுக்கு வந்த சகாப்தம்.. கண்ணீருடன் விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்.. மொத்த அரங்கமும் செய்த மரியாதை.. நெகிழ்ச்சி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ரோஜர் ஃபெடரர் தன்னுடைய கடைசி போட்டியில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

முடிவுக்கு வந்த சகாப்தம்.. கண்ணீருடன் விடைபெற்ற ரோஜர் ஃபெடரர்.. மொத்த அரங்கமும் செய்த மரியாதை.. நெகிழ்ச்சி வீடியோ..!

ரோஜர் ஃபெடரர்

சுவிட்சர்லாந்தில் உள்ள பேசில் என்ற பகுதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தவர் ரோஜர் ஃபெடரர். தந்தை ராபர்ட் ஃபெடரர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். தாய் லினெட் டு ராண்ட்  தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இதனால் பெடரருக்கு இரட்டை குடியுரிமை கிடைத்தது. பெடரருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அவருடைய பெயர் டயானா. சிறுவயது முதலே கால்பந்து, டென்னிஸ், பாட்மிண்டன், கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய ஃபெடரர் அதன்பிறகு டென்னிஸ் தான் தனது வாழ்க்கை என தேர்வு செய்து அதில் முழுநேரமாக ஈடுபட துவங்கினார்.

ஒருநாளைக்கு பல மணிநேரம் வரையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஃபெடரர் 1998-இல் ஒற்றயர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். அதே ஆண்டு ஆரஞ்சு பௌல் பட்டத்தையும் பெற்று ஐ.டி.எஃ-னால் அவ்வாண்டிற்கான உலகில் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரராக அங்கீகரிக்க பட்டார். அதன்பிறகு டென்னிஸ் உலகின் பெரும் தலைகளுக்கே சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் பெடரர்.

Roger Federer bids emotional farewell video goes viral

சாதனைகள்

ரோஜர் ஃபெடரர் இதுவரையில் 20 கிராண்ஸ்ட்லாம் போட்டிகளில் வென்றுள்ளார். தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் விளையாட்டு வரலாற்றில் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அனைவரையும் திகைக்க வைத்தவர் ஃபெடரர். அதேபோல, அதிக விம்பிள்டன் போட்டிகளில் வெற்றிபெற்றவர் என்ற சாதனைக்கு ஃபெடரர் தான் சொந்தக்காரர். இவர் 8 விம்பிள்டன் போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஃபெடரர் அறிவித்தது, உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கடைசி போட்டி

இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற தனது இறுதி போட்டியான லேவர் கோப்பை போட்டியில் பங்கேற்றார் ஃபெடரர். இதில் ஐரோப்பா அணிக்காக ஃபெடரர், நடால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியை எதிர்த்து உலக அணியில் இடம்பெற்றிருந்த பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக் ஆகியோர் விளையாடினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், ஃபெடரர், நடால் இணை 6-4, 6-7 (2/7), 9-11 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக்விடம் தோல்வியடைந்தது.

Roger Federer bids emotional farewell video goes viral

உருக்கம்

தனது கடைசிப்போட்டி குறித்து பேசிய ஃபெடரர்,"இது ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சோகமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நான் என் ஷுக்களை இன்னொரு முறை கட்டி மகிழ்ந்தேன். எல்லாம் இன்றுடன் கடைசியாக முடிந்தது. இங்குள்ள அனைவரும், அனைத்து ஜாம்பவான்களும் எனது நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நன்றி" என்றார். ஃபெடரர் பேசும்போது, அரங்கத்தில் இருந்த 17000 திற்கும் அதிகமான ரசிகர்கள் எழுந்துநின்று கரகோஷம் எழுப்பி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ROGER FEDERER, FINAL MATCH, TENNIS

மற்ற செய்திகள்