‘வந்த உடனே எல்லாம் உனக்கு சான்ஸ் கிடைக்காது’!.. அப்பவே தெளிவான எடுத்து சொன்ன ‘தல’.. சிஎஸ்கே வீரர் பகிர்ந்த சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததும் தோனி கூறிய அறிவுரை குறித்து ராபின் உத்தப்பா பகிர்ந்துள்ளார்.

‘வந்த உடனே எல்லாம் உனக்கு சான்ஸ் கிடைக்காது’!.. அப்பவே தெளிவான எடுத்து சொன்ன ‘தல’.. சிஎஸ்கே வீரர் பகிர்ந்த சீக்ரெட்..!

ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற உள்ளன. வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதுகின்றன. இப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Robin Uthappa revealed what Dhoni told him after he was picked by CSK

இதற்காக கடந்த மாதமே ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சிஎஸ்கே வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இப்போட்டியின் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டு பிளசிஸ் விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் (CPL) போட்டியில் டு பிளசிஸ் விளையாடி வருகிறார். அந்த தொடரின் போட்டி ஒன்றில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் அரையிறுதிப் போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.

Robin Uthappa revealed what Dhoni told him after he was picked by CSK

அதேபோல் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் விளையாடுவதும் சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. அவர் இன்று தான் (15.09.2021)  சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். இதனை அடுத்து 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர்தான் அவரால் விளையாட முடியும். ஆனால் போட்டி தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ளதால் அவரும் விளையாட வாய்ப்பில்லை. அதனால் அணியில் புதிதாக இணைந்துள்ள ராபின் உத்தப்பா விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Robin Uthappa revealed what Dhoni told him after he was picked by CSK

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததும் தோனி (Dhoni) கூறிய அறிவுரை குறித்து ராபின் உத்தப்பா (Robin Uthappa) பகிர்ந்துள்ளார். அதில், ‘அணிக்கு வந்த உடனே ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்து உன்னால் விளையாட முடியாது. காத்திருக்க வேண்டும் என ஆரம்பத்திலேயே தோனி தெளிவாக கூறிவிட்டார்’ என ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்