VTK M Logo Top
Sinam M Logo Top

ஓய்வுபெற முடிவெடுத்த பிரபல CSK அணியின் நட்சத்திர வீரர்.. மனம் உருகிய ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆடி வந்த சீனியர் வீரர் ஒருவர், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓய்வுபெற முடிவெடுத்த பிரபல CSK அணியின் நட்சத்திர வீரர்.. மனம் உருகிய ரசிகர்கள்!!

இந்திய அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா, கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார். ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள உத்தப்பா, 2007 ஆம் ஆண்டு, டி 20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் பிடித்திருந்தார்.

அந்த தொடரிலும் ஒரு சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த உத்தப்பா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வந்தார்.

இதன் பின்னர், ஐபிஎல் போட்டியில் ஒரு ரவுண்டு வந்த ராபின் உத்தப்பா, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பல அணிகளுக்காகவும் ஆடி உள்ளார். கடந்த 2021 - 22 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் உத்தப்பா ஆடி வந்தார்.

Robin uthappa decide to retire from all forms of cricket

சீனியர் வீரர் என்ற போதிலும், சில ஆட்டங்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்து சிஎஸ்கேவின் வெற்றிக்கும் வழிகாட்டி இருந்தார்.

அப்படி இருக்கையில், தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு தெரிவித்துள்ளார். தான் இதுவரை ஆடிய அனைத்து அணிகள், தனது மாநில கிரிக்கெட், பிசிசிஐ உள்ளிட்ட அனைவருக்கும் தனக்கு வாய்ப்பு கொடுத்ததை குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும், பயிற்சியாளர்கள், அணியினர், அணி வீரர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Robin uthappa decide to retire from all forms of cricket

மேலும், தன்னுடைய ட்வீட்டின் கேப்ஷனில், "எனது நாட்டிற்காகவும், மாநிலத்துக்காகவும் ஆட வாய்ப்பு கிடைத்ததை மிகப் பெரிய கவுரவமாக பார்க்கிறேன். இருப்பினும், அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வந்தே தீரும். நன்றி நிறைந்த இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்து ஒய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

 

CHENNAI-SUPER-KINGS, ROBIN UTHAPPA, CSK, IPL 2022, RETIREMENT

மற்ற செய்திகள்