IPL தொடரில் கடும் விமர்சனத்தை சந்தித்த ரியான் பராக்.. அடுத்த சீசனில் மாறும் ரோல்?.. RR கோச் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ரியான் பராக் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா பகிர்ந்துள்ளார்.
Also Read | “புகழப்படாத ஹீரோக்கள்”.. IPL இவ்ளோ சிறப்பா நடக்க காரணமே இவங்கதான்.. பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு..!
நடந்து முடிந்த 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இதில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
ஒரு போட்டியில் கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரி பார்த்துக் கொள்ளும்படி கிண்டலடித்தார். இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல் ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து சேட்டைகள் செய்து வந்தார். அதனால் முன்னாள் வீரர்கள் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கினர்.
இந்த நிலையில் ரியான் பராக் குறித்து ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா பேசியுள்ளார், அதில், ‘பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்கள் அணியினரின் பேட்டிங்கை நீங்கள் பார்த்தால் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ஹெட்மயர் ஆகியோரின் பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளனர். ரியான் பராக் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் நன்றாக விளையாடினர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால், சப்போர்ட் ரோல் வீரர்களிடமிருந்து எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டத்திறன் தேவை என்று நினைக்கிறேன்.
அடுத்த சீசனில் ரியான் பராக் அதிக நேரம் பேட்டிங் செய்யும் படி களமிறக்க உள்ளோம். வெறும் டெத் ஹிட்டரை விட, மிடில் ஆர்டர் வீரராக அவரை மாற்ற உள்ளோம். ஏனென்றால், அவர் சுழல் மற்றும் வேகப்பந்துகளை சிறப்பாக எதிர்கொள்கிறார்’ என்று கூறினார். இந்த ஐபிஎல் சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், 183 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | கொள்ளை நடந்த வீட்டில் கிடச்ச செல்போன்.. உள்ளே இருந்த போட்டோ.. சென்னையில் நடந்த துணிகரம்..!
மற்ற செய்திகள்