முதல் மேட்ச்'ல Face mask டிரெண்ட்.. இப்போ Flying Kiss.. "ரிஷி தவான் யாருக்கு இத குடுத்தாரு??"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முதல் மேட்ச்'ல Face mask டிரெண்ட்.. இப்போ Flying Kiss.. "ரிஷி தவான் யாருக்கு இத குடுத்தாரு??"

ஹைதராபாத் அணிக்கு எதிராக மட்டுமே தோல்வி அடைந்திருந்த குஜராத் அணி, பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கி இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 143 ரன்கள் எடுத்திருந்தது. தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஐபிஎல் தொடரில் முதல் அரை சதத்தை பதிவு செய்திருந்தார்.

எளிதாக வென்ற பஞ்சாப் கிங்ஸ்

65 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்ஷன், குஜராத் அணி கவுரவமான ஸ்கோரை எட்டவும் உதவி செய்திருந்தார். அவரது இன்னிங்ஸ் குறித்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில், ஷிகர் தவான், பனுக்கா ராஜபக்ஷே, லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது பஞ்சாப் அணி.

rishi dhawan flying kiss send off to hardik pandya

ரிஷி கொடுத்த Flying Kiss

அதிலும், ஷமி வீசிய 16 ஆவது ஓவரில், 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்த லிவிங்ஸ்டனைக் கண்டு பலரும் மிரண்டு போயுள்ளனர். அதே போல, அவர் அடித்த 117 மீட்டர் சிக்சரும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக தூரம் சென்ற சிக்ஸராக பதிவாகி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது ரிஷி தவான் கொடுத்த 'Flying Kiss' ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

rishi dhawan flying kiss send off to hardik pandya

5 ஆண்டுகளுக்கு பின் என்ட்ரி..

கடைசியாக, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஐபிஎல் தொடரில் களமிறங்கி இருந்த ரிஷி தவான், அதன் பின்னர் நடப்பு சீசனில் தான், பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார். இதற்கு நடுவே, உள்ளூர் போட்டிகளில் ஆடி ஆல் ரவுண்டர் திறனையும் அவர் நிரூபித்ததால், ஐபிஎல் ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி எடுத்திருந்தது.

rishi dhawan flying kiss send off to hardik pandya

கொண்டாடிய ரிஷி தவான்

தொடர்ந்து, கடந்த சில போட்டிகளாக ஆடி வரும் ரிஷி தவான், சிறப்பாக பஞ்சாப் அணிக்கு வேண்டி செயல்பட்டு வருகிறார். குஜராத் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் சேர்த்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, ஒரே ரன்னில் நடையைக் கட்ட வைத்தார் ரிஷி தவான். அவரை அவுட் எடுத்ததும், Flying Kiss கொடுத்து கொண்டாடினார் ரிஷி தவான்.

 

இந்த தொடரின் முதல் போட்டியில், மூக்குப் பகுதியில் நடந்த சர்ஜரிக்கு வேண்டி, ரிஷி தவான் அணிந்திருந்த 'Face Mask' ஒன்றும் பெரிய அளவில் வைரலாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது அவரது Flying Kiss கொண்டாட்டமும் வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

RISHI DHAWAN, HARDIK PANDYA, FLYING KISS, ரிஷி தவான், ஹர்திக் பாண்டியா

மற்ற செய்திகள்