அடுத்த 10 வருசத்துக்கு 'அவரு' தான் கிங்...! 'என்னமா பேட்டிங் பண்றாரு...' இந்த வயசுலையே இப்படியா...! - புகழ்ந்து தள்ளும் சரண்தீப் சிங் ...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இருக்கும் இளம் வீரர் இந்திய கிரிக்கெட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் அளவிற்கு தன் திறமையை வெளிப்படுத்துகிறார் என முன்னணி வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆறு மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. அதில் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
அதேபோல, இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாடிய இந்திய அணி மூன்று 3 பார்மட்களையும் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது. இதற்கு காரணம் இந்திய அணியில் இருந்த இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். நடந்து முடிந்த இரு தொடர்கள் மூலம் திறமை வாய்ந்த இளம் வீரர்களை கண்டறிந்து இருக்கிறது இந்திய அணி.
அவர்களில் முக்கியமாக சர்துல் தாகூர், ரிஷப் பண்ட், பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ், இசான் கிசான் ராகுல் சாஹர் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது அனைவராலும் கொண்டாடப்படுகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்து இருக்கிறார்.
ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு சதம்(101) மற்றும் நான்கு அரை சதம் (58,77,78,91) விளாசி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இங்கிலாந்து தொடரில் ரிவர்ஸ் ஷாட்களை அடித்து ரசிகர்களை மகிழ வைத்தார். மேலும் சிக்ஸர் மழையை பொழிய வைத்தார். இந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரின் மூலம் ரிஷப் பண்டிற்கு அதிக ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
தற்போது, ரிஷப் பண்ட்டின் ஆட்டம் குறித்து சரண்தீப் சிங் கூறியதாவது, 'ரிஷப் பண்ட் தற்போது தலைசிறந்த வீரராக மாறி இருக்கிறார். 23 வயதே ஆன இவர் 30 வயதான சீனியர் வீரர்கள் போல் சிறப்பாக விளையாடி வருகிறார். இதற்கு முன் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி பிரச்சினையால் சிறப்பாக விளையாட முடியாமல் தவித்து வந்தார். ஆனால் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு உடற்தகுதியுடன் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பண்ட் அடுத்த 10 வருடங்களுக்கு விளையாடுவார்' எனக் கூறியிருக்கிறார்.
மற்ற செய்திகள்