ரிஷப் பண்ட் போலவே பேட்டிங் செய்த சிறுவன்.. வீடியோவை கண்டு வாழ்த்திய ரிஷப் பண்ட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் போலவே சிறுவன் ஒருவன் பேட்டிங் செய்யும் வீடியோ வைரலான நிலையில் அந்த பதிவில் பண்ட் கமெண்ட் செய்துள்ளார்.

ரிஷப் பண்ட் போலவே பேட்டிங் செய்த சிறுவன்.. வீடியோவை கண்டு வாழ்த்திய ரிஷப் பண்ட்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | 800 ஆண்டு பழமையான மம்மியை தனது தோழி என கூறிய நபர்.. பெரு நாட்டில் விநோதம்..!

ரிஷப் பண்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

விபத்து

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே, தன்னால் பல்துலக்க முடிவதாகவும் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் பண்ட் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Rishabh Pant Wishes Kid who batted like him video goes viral

Images are subject to © copyright to their respective owners.

வைரல் வீடியோ

இந்த சூழ்நிலையில் சிறுவன் ஒருவன் ரிஷப் பண்ட் போலவே பேட்டிங் செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தது. அயன் எனும் இந்த சிறுவன் தனது வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறான். அப்போது அந்த சிறுவனின் தந்தை "யாரைப்போல பேட்டிங் செய்கிறாய்?" என கேட்க, தான் ரிஷப் பண்ட் போல பேட்டிங் செய்வதாக மழலை மொழியில் கூறுகிறான் அந்த சிறுவன்.

Rishabh Pant Wishes Kid who batted like him video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அயனின் தந்தை சுவாஜித் முஸ்தபி. மேலும் அதில்," ஹாய் ரிஷப். உங்களது உடல் நலம் இப்போது எப்படி உள்ளது?. என் மகன், அயன் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். உங்களைப்போலவே இடது கை பேட்டிங் செய்கிறான். உங்களுக்கு விபத்து நேர்ந்தது முதல் உங்களது நலனுக்காக அவன் பிரார்த்தித்து வருகிறான். அவன் இன்று தனது ஆறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறான். அவனுக்கு வாழ்த்து சொல்ல முடியுமா?" எனக் கேட்டிருந்தார்.

Rishabh Pant Wishes Kid who batted like him video goes viral

Images are subject to © copyright to their respective owners.

சர்ப்ரைஸ்

இந்த வீடியோ பதிவு ட்விட்டர் பக்கத்தில் வைரலானது. இதனிடையே இந்த வீடியோவை கண்ட ரிஷப் பண்ட் அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் எழுதிய பதிவில்,"பிறந்த நாள் வாழ்த்துகள் அயன். இந்த வருடம் சிறப்பானதாக அமையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : "முதலமைச்சர் முக.ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி" - EVKS இளங்கோவன்..!

RISHABH PANT, KID

மற்ற செய்திகள்