Video : '9' ரன்களில் நடையைக் கட்டிய இங்கிலாந்து 'வீரர்'... அவரு அவுட் ஆகுறதுக்கு முன்னாடி... ரிஷப் பண்ட் சொன்ன 'விஷயம்'... மைக்கில் பதிவான 'ஆடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

Video : '9' ரன்களில் நடையைக் கட்டிய இங்கிலாந்து 'வீரர்'... அவரு அவுட் ஆகுறதுக்கு முன்னாடி... ரிஷப் பண்ட் சொன்ன 'விஷயம்'... மைக்கில் பதிவான 'ஆடியோ'!!

இதில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, மூன்றாவது டெஸ்ட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்குள் இந்த போட்டி முடிவடைந்தது.

இதனால், பிட்ச் தரமானதாக இல்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். நான்காவது போட்டியிலும், தரமில்லாத பிட்ச் தான் தயார் செய்யப்படும் என்றும் அவர்கள் குற்றம் கூறியிருந்தனர்.

இதனையடுத்து, இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாக் க்ராவ்லி 9 ரன்களிலும், சிப்லி 2 ரன்களிலும் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். இதில், க்ராவ்லி ஆட்டமிழப்பதற்கு முன்னர், கீப்பர் நின்றிருந்த ரிஷப் பண்ட், 'யாரோ கோவப்படுகிறார்கள்' என பேட்ஸ்மேன் க்ராவ்லியை குறிப்பிட்டு கூறினார். அதன் பிறகு, அக்சர் படேல் வீசிய பந்தை, பவுண்டரிக்கு அடிக்க  எண்ணி, கிரீஸை விட்டு இறங்கிய க்ராவ்லி, பந்தை ஓங்கி அடிக்க, அது சரியாக படாமல் நேராக உயர்ந்தது. இந்திய வீரர் சிராஜ் அதனை கேட்சாக மாற்ற, க்ராவ்லி ஆட்டமிழந்தார்.

 

இது தொடர்பான வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்