காயத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் ரிஷப் பண்ட்?.. இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டோரி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners
டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பண்ட் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners
இந்திய அணியின் தலைச்சிறந்த இளம் வீரராக வலம் வந்த ரிஷப் பண்ட், திடீரென விபத்தில் சிக்கி இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல, விரைவில் அவர் மீண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார். அதில், ரிஷப் பண்ட் வெளியே அமர்ந்து இயற்கையை ரசிப்பது போல் தெரிகிறது. அவர் முகம் தெரியவில்லை என்றாலும் திறந்த வெளியில் அவர் இருப்பது மட்டும் தெரிகிறது.
Image Credit : Rishabh Pant Instagram
மேலும் தனது ஸ்டோரியில், "வெளியே உட்கார்ந்து புதிய காற்றை சுவாசிப்பது மிகவும் பாக்கியம் பெற்றது போன்ற உணர்வைத் தருகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்