"அன்னைக்கி அந்த பையன 'செலக்ட்' பண்ணப்போ, எல்லாரும் எங்கள கழுவி ஊத்துனாங்க.. ஆனா, இன்னைக்கி 'அவரு' லெவலே வேற.." 'முன்னாள்' தேர்வாளர் உடைத்த 'ரகசியம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இன்னும் 8 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்காக, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், முதல் டெஸ்ட் கோப்பையைக் கைப்பற்ற, இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய அணியைப் பொறுத்தவரையில், சமீப காலமாக, சொந்த மண்ணில் மட்டுமில்லாது, வெளிநாட்டு மைதானங்களிலும் சிறப்பாக ஆடி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியில், அனுபவ வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்ட போதும், இளம் வீரர்களைக் கொண்டு, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, வரலாறு படைத்திருந்தது. அதே போல, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியிலும் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், அவர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (Rishabh Pant), மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். எப்படிப்பட்ட அபாயகரமான பவுலராக இருந்தாலும், அவர்களின் பந்துகளை, ஏதோ ஒரு முதிர்ந்த வீரர் போல அசால்ட்டாக அடித்து நொறுக்குகிறார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் (MSK Prasad), ரிஷப் பண்ட் குறித்து, சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
'ரிஷப் பண்ட்டை அணியில் தேர்வு செய்த போது, பல விதமான சர்ச்சைகள் உருவானது. அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியாதென்றும், சிறப்பாக கீப்பிங் செய்ய முடியாது என்றும், பலர் விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையை நிரூபித்து, தன் மீதான நம்பிக்கையும் வளர்த்து விட்டார்.
ஆரம்பத்தில், ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்த சமயத்தில், இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பராக விரித்திமான் சஹா இருந்தார். ஆனால், அதன் பிறகு, வெளிநாட்டுத் தொடர்களில், அவரது கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனை நிரூபித்த பண்ட், அணியில் தனக்கான இடத்தின் அவசியத்தையும், அணி நிர்வாகத்தினர் வரை உணர வைத்தார்' என பிரசாத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்