"ப்பா, இப்டி ஒரு 'ஷாட்'ட எந்த 'கிரிக்கெட்' மேட்ச்'லயும் பாத்தது இல்ல..." 'மிரண்டு' போன 'முன்னாள்' வீரர்கள்... ரிஷப் பண்ட் செஞ்ச 'சம்பவம்'!! 'வைரல்' வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் டி 20 போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

"ப்பா, இப்டி ஒரு 'ஷாட்'ட எந்த 'கிரிக்கெட்' மேட்ச்'லயும் பாத்தது இல்ல..." 'மிரண்டு' போன 'முன்னாள்' வீரர்கள்... ரிஷப் பண்ட் செஞ்ச 'சம்பவம்'!! 'வைரல்' வீடியோ!

அதன் படி ஆடிய இந்திய அணி, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இந்திய அணி  தோல்வியடைந்தாலும், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் ஒன்று வேற லெவலில், ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் இருந்து பாராட்டைப் பெற்று வருகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் அடித்த பண்ட், அதனை சிக்ஸராக மாற்றினார்.

rishabh pant reverse sweep to jofra archer gone viral

ஏற்கனவே, இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் பவுண்டரியாக ரிஷப் பண்ட் மாற்றியிருந்தார். அதே போல தற்போதும் ஆர்ச்சரின் பந்தை ரிவர்ஸ் ஷாட்டாக அடித்து அசத்தியுள்ளார்.

அதிக அச்சுறுத்தல் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களின் பந்தை, அதுவும் கிட்டத்தட்ட 140 கி.மீ வேகத்தில் வரும் பந்தை, எந்தவித பயமும் இல்லாமல், சிறப்பாக அடித்த இளம் வீரர் ரிஷப் பண்டின் ஷாட்டை, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கிரிக்கெட் வரலாற்றில், மிகச் சிறந்த ஷாட் ஒன்றை பண்ட் அடித்துள்ளார்' என புகழ்ந்துள்ளார். அதே போல, யுவராஜ் சிங், வாசிம் ஜாஃபர், விவிஎஸ் லட்சுமண் உள்ளிட்ட பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

மற்ற செய்திகள்