Kadaisi Vivasayi Others

கில்கிறிஸ்டாக மாறிய ரிசப் பண்ட்! தோனிக்கு அடுத்து கிடைத்த பொன்னான வாய்ப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அகமதாபாத்: இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

கில்கிறிஸ்டாக மாறிய ரிசப் பண்ட்! தோனிக்கு அடுத்து கிடைத்த பொன்னான வாய்ப்பு

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!

மோசமான தென் ஆப்ரிக்க தொடருக்கு பிறகு இந்திய அணி உள்நாட்டு சீசனுக்கு தயாராகி உள்ளது. தென் ஆப்ரிக்க பயணத்துக்கு பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையே 6 போட்டிகள் கொண்ட 20 & 50 ஓவர்கள் தொடருக்கான திருத்தப்பட்ட புதிய இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2022 பிப்ரவரி 6 ஆம் தேதி ஒருநாள் போட்டியுடன் தொடங்கி உள்ளது. 6 போட்டிகள் கொண்ட ஒயிட்-பால் தொடர் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடர்களைக் கொண்டது.

Rishabh Pant Opening The Innings against West Indies at Ahmedabad

முன்னதாக, இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருநாள் போட்டிகள் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருந்தது. மேலும், டி20 சர்வதேச போட்டிகள் முறையே கட்டாக், விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இருப்பினும், இப்போது மைதானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன, மேலும் அனைத்து ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனிலும் நடைபெறும் என BCCI அறிவித்தது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை 2022:

1வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 6, ஞாயிறு, அகமதாபாத்

2வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 9, புதன், அகமதாபாத்

3வது ஒருநாள் போட்டி, பிப்ரவரி 11, வெள்ளிக்கிழமை, அகமதாபாத்

1வது T20I, பிப்ரவரி 16, புதன்கிழமை, கொல்கத்தா

2வது T20I, பிப்ரவரி 18, வெள்ளி, கொல்கத்தா

3வது டி20, பிப்ரவரி 20, ஞாயிறு, கொல்கத்தா

அதன்படி  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி இந்திய அணியில் இஷான் கிஷன் நீக்கப்பட்டு ராகுல் விளையாடுகிறார்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக ராகுல் -ரோகித் ஓபனிங் இறங்காமல் ரோகித்துடன் ரிஷப் பண்ட் ஓபனிங் இறங்கியுள்ளார், மேலும் கில்கிறிஸ்ட் போல இடது கை அதிரடி ஆட்டகாரர் ரிஷப் பண்ட் கில்கிறிஸ்ட் போலவே ஓபனிங் இறங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனி ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஓபனிங் இறங்கி உள்ளார். சில போட்டிகளில் நமன் ஓஜாவும் ஓபனிங் இறங்கி உள்ளார். 

ஒரு நாள் போட்டிகளில் ரிசப் பண்ட் இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதனால் இந்த போட்டியில் ஓபனிங் இறங்கியது ரிசப்புக்கு நல்ல வாய்ப்பு. ஆனால் அந்த வாய்ப்பை ரிசப் பண்ட் பயன்படுத்தாமல் 18 (34)  ரன்னில் ஸ்மித் பந்தில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

VIDEO: 2 நாளா மலையில் சிக்கிய இளைஞர் மீட்பு.. பத்திரமா மேலே வந்ததும் அவர் செய்த செயல்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

Rishabh Pant Opening The Innings against West Indies at Ahmedabad

RISHABH PANT, INNINGS, WEST INDIES, INDIA, AHMEDABAD, ரிசப் பண்ட், இந்தியா - வெஸ்ட்இண்டீஸ், பிசிசிஐ

மற்ற செய்திகள்