"அட, இவரு என்னப்பா இங்க??.." தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளம் இந்திய வீரர்.. வைரலாகும் புகைப்படம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ஆன மகேந்திர சிங் தோனி, இன்று (07.07.2022) தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

"அட, இவரு என்னப்பா இங்க??.." தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளம் இந்திய வீரர்.. வைரலாகும் புகைப்படம்

இந்திய அணியின் தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய தோனி, இந்திய அணிக்காக டி 20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட ஐசிசி கோப்பைகளை வென்று பல்வேறு சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

அப்படிப்பட்ட மகத்தான கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருக்கு, உலகளவில் ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடிய தோனி

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு, ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். சிஎஸ்கே ஆடும் போட்டியில் தோனி ஆடுவதைக் காண வேண்டியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு, தோனி தோனி என ஆக்ரோஷமும் எழுப்புவார்கள்.

rishabh pant joins dhoni birthday celebrations

இந்நிலையில், தோனியின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்தி வருகின்றனர். அதே போல, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இங்கிலாந்தில் இருக்கும் தோனி, அனைவரின் முன்னிலையிலும் தனது பிறந்த நாளைக் கேக் வெட்டிக் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

"கூட்டத்துல இவரும் இருக்காரே"..

இதில், தோனியுடன் பலரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை சாக்ஷி பகிர்ந்துள்ள நிலையில், அதில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தும் நிற்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ரிஷப் பந்த் களமிறங்கி இருந்த நிலையில், இன்று ஆரம்பமாகும் டி 20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

rishabh pant joins dhoni birthday celebrations

தொடர்ந்து, அவர் தோனியின் பிறந்தநாள் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளது தொடர்பாகவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தோனி இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தொடர்ந்து ரிஷப் பந்த் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RISHABHPANT, MSDHONI, DHONI BIRTHDAY

மற்ற செய்திகள்