‘அவர் ரொம்ப டேஞ்சரான ப்ளேயர், அப்பவே அவரை பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்’!.. நியூஸிலாந்து பவுலிங் கோச்சுக்கு பயம் காட்டிய இந்திய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் குறித்து நியூஸிலாந்து அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜார்ஜென்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

‘அவர் ரொம்ப டேஞ்சரான ப்ளேயர், அப்பவே அவரை பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்’!.. நியூஸிலாந்து பவுலிங் கோச்சுக்கு பயம் காட்டிய இந்திய வீரர்..!

இங்கிலாந்து நாட்டில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்து அணியும் மோதவுள்ளன. இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடரில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வரும் ஜூன் 2-ம் தேதி அவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishabh Pant is extremely dangerous, says New Zealand bowling coach

இந்த நிலையில் The Telegraph ஊடகத்துக்கு பேட்டியளித்த நியூஸிலாந்து பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜார்ஜென்சன், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ‘ரிஷப் பந்த ஒரு ஆபத்தான வீரர். எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அத்தகைய ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியபோதே எங்களுக்கு அவரை பற்றி தெரிந்துவிட்டது. அதனால் ரிஷப் பந்தின் விக்கெட் நியூஸிலாந்துக்கு மிகவும் முக்கியம்’ என ஷேன் ஜார்ஜென்சன் தெரிவித்துள்ளார்.

Rishabh Pant is extremely dangerous, says New Zealand bowling coach

தொடர்ந்து பேசிய அவர், ‘நியூஸிலாந்து பவுலர்கள் மிகச்சிறப்பாக பந்து வீச வேண்டும். ரிஷப் பந்த் விரைவாக ரன் சேர்ப்பதை அவர்கள் தடுக்க வேண்டும். இது கடினமான காரியம்தான். அதேபோல் இந்தியாவின் பவுலிங்கும் வலுவானதாக உள்ளது. பும்ரா, ஷர்துல் தாகூர், சிராஜ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்த போட்டி கடினமானதாகதான் இருக்கப்போகிறது’ என ஷேன் ஜார்ஜென்சன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்