‘இந்த 1 நிமிஷம் உங்க கணக்குதான்’!.. நேக்கா ‘அம்பயர்’ பக்கம் திருப்பிவிட்ட ரிஷப் பந்த்.. அஸ்வின் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை தழுவியது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 7-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 51 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை உனட்கட் 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி,19.4 ஓவர்களில் 150 ரன்கள் அடித்து த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 62 ரன்கள் அடித்தார். அதேபோல் கடைசி கட்டத்தில் களமிறங்கிய கிறிஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் இப்போட்டியின் பவர் ப்ளேவின் போது டெல்லி அணியின் அஸ்வின் பந்து வீச வந்தார். அப்போது களத்தில் நின்ற அம்பயர் அவரை தடுத்து, பவர் ப்ளே வட்டத்துக்கு வெளியே எத்தனை வீரர்கள் நிற்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தார். அப்போது, ‘இந்த ஒரு நிமிடத்தை நீங்கள் எடுத்துள்ளீர்கள் அம்பயர்’ என சிரித்தபடியே கூறினார்.
"That one minute taken by you, umpire!"
Rishabh Pant on the slight delay from umpire's end in Ashwin's over😂#RRvsDC
— Rahul Pandey (@sportstoryguy) April 15, 2021
Pant: This one minute is taken by you umpire.
🤣🤣🤣 How to escape slow over rate fine ft. Rishabh. #DCvsRR
— Manya (@CSKian716) April 15, 2021
போட்டியின் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விளையாடினால் Slow over-rate முறையில் அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து தப்பிக்கதான் நேக்காக ரிஷப் பந்த் அப்படி கூறியுள்ளார் என ரசிகர்கள் குறும்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்