'எனக்கு அவர பாக்குறப்போ...' 'கோலி, வில்லியம்சன் மாதிரி தான் தெரியுறாரு...' 'பத்து, பனிரெண்டு வருஷம் சும்மா கெத்து காட்ட போறாரு...' - இளம் வீரரை பாராட்டி தள்ளிய ரிக்கி பாண்டிங்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனை, பயிற்சியாளர் இந்திய அணியின் மற்றொரு வீரருடன் சேர்த்து பாராட்டிய சம்பவத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

'எனக்கு அவர பாக்குறப்போ...' 'கோலி, வில்லியம்சன் மாதிரி தான் தெரியுறாரு...' 'பத்து, பனிரெண்டு வருஷம் சும்மா கெத்து காட்ட போறாரு...' - இளம் வீரரை பாராட்டி தள்ளிய ரிக்கி பாண்டிங்...!

2021ஆம் ஆண்டு ஐபில் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாக இந்த சீசனில் பொறுப்பேற்றுள்ளார்.

மேலும், இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் போட்டியாக, சிஎஸ்கேவிற்கு எதிரான ஆடி வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதோடு நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் மோதவுள்ளது.

இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கோச் ரிக்கி பாண்டிங், கேப்டன் ரிஷப் பந்த் குறித்து வலைதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பாராட்டி தள்ளியுள்ளார்.

Rishabh pant hailed likes Virat Kohli and Kane Williamson.

அதில், 'இந்த சீசனில் கேப்டன் ரிஷப் பந்த், அவரின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். கடந்த சில மாதங்களாக அவரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மேலும் போட்டியின் போது, அவர் இறுதிவரை ஆடினால், அந்த போட்டி வெற்றியாக தான் இருக்கும். ரிஷப் பந்த் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போன்று திறமை வாய்ந்தவர். மேலும் பத்து பனிரெண்டு வருடங்களுக்கு குறையாமல் இந்திய அணியில் இடம்பெறுவார், என பாண்டிங் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்