‘அவ்ளோ பேசிட்டு இப்டிதான் பண்றதா’.. கடுப்பான அஸ்வின்.. ரிஷப் பந்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை கேட்சை தவறவிட்டதால் ரிஷப் பந்தை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக வில் புகோவ்ஷ்கி மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார்னரை 5 ரன்னில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அவுட்டாக்கி அசத்தினார்.
இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் வில் புகோவ்ஷ்கி அடித்த பந்து பேட்டின் நுனியில் பட்டு விக்கெட் கீப்பருக்கு கேட்ச் சென்றது. ஆனால் அதை ரிஷப் பந்த் தவறவிட்டார். இதனால் சகவீரர்கள் அவரிடம் சற்று கடிந்துகொண்டனர். அப்போது அஸ்வினும் சற்று கோபமடைந்தார் .பின்னர் ஓவர் முடிந்ததும் ரிஷப் பந்தை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றார்.
Pant gives Puc a life! #AUSvIND pic.twitter.com/PwhpHuJI4D
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021
"The third umpire is looking for conclusive evidence to say the ball has bounced ... and in this particular case the fingers weren't underneath the ball from the keeper." - Simon Taufel #AUSvIND pic.twitter.com/zhroJTRu53
— 7Cricket (@7Cricket) January 7, 2021
இதனைத் தொடர்ந்து மீண்டும் வில் புகோவ்ஷ்கி கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தவறவிட்டார். இதனால் அவர் அரைசதத்தை (62) கடந்து அசத்தினார். முன்னதாக அஸ்வின் பந்து வீசும் போது உற்சாகப்படுத்தும் விதமாக ரிஷப் பந்த் பேசினார். அப்போதுதான் அஸ்வின் வீசிய பந்து விக்கெட் கீப்பிங் கேட்சுக்கு சென்று ரிஷப் பந்த் தவறவிட்டார். இதனால் ரிஷப் பந்துக்கு பதிலாக விக்கெட் கீப்பர் சாகாவை அணியில் எடுத்திருக்கலாம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
#RishabhPant you are not only embarrassing yourself but letting the whole country down.#AUSvIND
— DEEPAK SHAHI (@DEEPAKSHAHI3) January 7, 2021
But please please let’s play Pant over Saha! He will score a triple century! Sure he will drop a few catches but that’s not the wicketkeeper’s job is it? Holding on to routine catches? #INDvsAUSTest #RishabhPant
— Gautam Govitrikar DMD (@Gautaamm) January 7, 2021
மற்ற செய்திகள்