RRR Others USA

டெல்லி அணி இந்த தடவை ப்ளே ஆஃப் போறதே கஷ்டம் தான்.. என்ன இப்பவே இப்படி சொல்லிட்டாரு.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இந்த தடவை ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி அணி இந்த தடவை ப்ளே ஆஃப் போறதே கஷ்டம் தான்.. என்ன இப்பவே இப்படி சொல்லிட்டாரு.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் மார்ச் 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய இரு அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில் கோப்பையை வெல்லவதற்காக அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அணிகளான டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனல் பக்கத்தில் பேசிய அவர், ‘டெல்லி அணியை நினைத்து எனக்கு சற்று கவலை ஏற்பட்டுள்ளது. முதல் 3 போட்டிகளில் 2 போட்டிகளில் அந்த அணி எளிதாக தோற்கும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது முதல் 3 போட்டிகளிலும் தோற்க வாய்ப்புள்ளது.

Rishabh Pant DC fail to enter playoffs in IPL 2022: Aakash Chopra

ஒரு சில போட்டிகளில் யாராவது ஒரு வீரர் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் அது போன்ற வெற்றிகள் அணிக்கு தன்னம்பிக்கை கொடுக்காது. இந்த முறை டெல்லி அணி பிளே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனால் அதற்காக நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

சுமாரான செயல்பாடுகள், வெளிநாட்டு வீரர்களின் நிலையற்றதன்மை போன்றவற்றின் காரணமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் முதல் போட்டியே தோல்வியுடன் ஆரம்பித்தால் முடிவு எப்படி இருக்கும் என தெரியவில்லை’ என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

RISHABHPANT, DELHICAPITALS, IPL2022, AAKASHCHOPRA, PLAYOFFS

மற்ற செய்திகள்