மேட்ச் ஜெயிச்சும்.. 'DC' கேப்டன் ரிஷப் பண்ட் மீது எழுந்த விமர்சனம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு ஓவர் தான்'ங்க காரணம்.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில், கடைசியாக கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதி இருந்த போட்டியில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் சரிந்து கொண்டே இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா 57 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை என்பதால், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே கொல்கத்தா எடுத்திருந்தது.
முன்னேற்றம் கண்ட 'DC'
.
பின்னர், இலக்கை நோக்கி ஆடிய டெல்லியும், முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருந்தும் எளிய இலக்கு என்பதால் அக்சர் படேல் மற்றும் போவல் ஆகியோர் ஓரளவுக்கு கடைசியில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால், 19 ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்று அசத்தி இருந்தது. இந்த வெற்றியின் மூலம், 8 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திற்கு முன்னேறி இருந்தது டெல்லி.
4 விக்கெட்டுகள் எடுத்த டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதினை பெற்றிருந்தார். டெல்லி வெற்றி பெற்ற 4 போட்டிகளிலும், குல்தீப் தான் ஆட்ட நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும், அவரது கம்பேக்கிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ரிஷப் பண்ட் மீது விமர்சனம்..
மறுபக்கம், 9 ஆட்டங்களில் 3 போட்டிகள் மட்டுமே வென்றுள்ள கொல்கத்தா, நெருக்கடியான சூழலில் உள்ளது. இந்நிலையில், டெல்லி அணி வெற்றி பெற்றும், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் எடுத்த சில முடிவுகள், அதிக விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி, 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அவர் சிறப்பாக பந்து வீசிய போதும், 4 ஆவது ஓவரை குல்தீப்பிற்கு பண்ட் வழங்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, நிதிஷ் ராணா களத்தில் இருந்த போது, 17 ஆவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் லலித் யாதவிடம் கொடுத்தார் பண்ட். இந்த ஓவரில் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்த கொல்கத்தா, இந்த ஓவரை பயன்படுத்தி, பின்னர் ரன் சேர்க்க தொடங்கியது.
பெரிய மர்மமா இருக்க போகுது..
குல்தீப்பிற்கு ஒரு ஓவர் இருந்த போதும், அவருக்கு ஓவர் வழங்காமல் லலித் யாதவிற்கு ரிஷப் பண்ட் ஓவரை வழங்கியதை ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல், முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களை முழுமையாக வீசாமல் போனது தான், இந்த சீசனில் மிகப் பெரிய மர்மமாக இருக்கும். மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆகாஷ் சோப்ராவை போலவே, ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் எடுத்த முடிவு பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்