பயிற்சியாளரை கும்மாங்குத்து குத்திய சாஹல்...! ரிஷப் பந்திற்கும் சில குத்துகள்...! வைரலாகும் 'குறும்பு வீடியோ'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉடற்பயற்சிக்காக குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டபோது, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஃபிட்நெஸ் பயிற்சியாளர் நிக் வெப்பை குறும்புத்தனமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வலைபயிற்சியின் நடுவே ஒரு மாறுதலுக்காக வேறு சில விளையாட்டுக்களிலும் ஈடுபடுவது வழக்கம். அப்போது வீரர்கள் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் கவருவது உண்டு.
அந்த வகையில், இந்தியா, இலங்கை இடையிலான டி-20 போட்டிக்காக வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பயிற்சியின் நடுவே வீரர்கள் சிலர் ஜிம்மில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொண்டனர். நிக் வெப், அவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வீரர்கள் பயிற்சியாளரை விளையாட்டாக தாக்கிய வீடியோவை ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், நிக்வெப்பும், ரிஷப் பந்தும் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்வது போன்ற காட்சி உள்ளது. பின்னர் நிக்குடன், சுழற்பந்து வீச்சாளர் சாஹல் குத்தச்சண்டை பயிற்சி மேற்கொள்கிறார். அப்போது ரிஷப் பந்த ஓடி வந்து நிக்கை பிடித்துக் கொள்ள சாஹல் அவரை சரமாரியாகத் தாக்குகிறார். சாஹல், ரிஷப் மீதும் சில குத்துக்களை விடுகிறார். இவர்களுடன் இளம் வீரர் சஞ்சு சாம்சனும் இணைந்து கொள்கிறார். குறும்புத்தனமாக நடைபெற்ற இந்த சண்டைக் காட்சியை ரிஷப் பந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.