விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்.. டிவைடரில் மோதி தீப்பிடித்த கார்.. அதிர்ச்சி சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வங்காளதேசம் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை வங்காளதேச கிரிக்கெட் அணி கைப்பற்றி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த்திற்கு விபத்து ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்தி, தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பந்த். ஐபிஎல் உள்ளிட்ட பல உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி தனது திறனை நிரூபித்த ரிஷப் பந்த்திற்கு இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் கிடைத்தது.
பல எதிர் அணிகளுடன் சிறப்பாக பேட்டிங் செய்த ரிஷப் பந்த், சமீபத்தில் வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி இருந்தார். இதற்கு அடுத்தபடியாக, இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் மற்றும் டி 20 தொடர்கள் ஜனவரி மாதம் ஆரம்பமாகிறது. காயம் காரணமாக இதில் ரிஷப் பந்த் இடம்பெறவில்லை என்றும் தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில், டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு ரிஷப் பந்த் திரும்பி கொண்டிருந்த போது அவர் பயணம் மேற்கொண்ட கார், விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. டெல்லி டெஹ்ராடன் நெடுஞ்சாலையில், ஹம்மத்பூர் ஜால் என்னும் இடத்தில் வைத்து ரிஷப் பந்த் வந்த கார் டிவைடரில் மோதி தீ பிடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, ஜன்னலை உடைத்து வெளியே வந்து படு காயங்களுடன் இருந்த ரிஷப் பந்த்தை அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, தீப்பிடித்த அவரது காரையும் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் சிக்கிய சம்பவம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. ரிஷப் பந்த் உடலின் பல இடங்களில் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, ரிஷப் பந்த் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read | பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.. பிரதமரின் உருக்கமான ட்வீட்..!
மற்ற செய்திகள்