மீண்டும் நடுவரிடம் முறையிட்ட ரிஷப் பண்ட்??.. "இப்பவும் அதே நோ பாலுக்காக தான்.." பரபரப்பை ஏற்படுத்திய 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் சமீபத்தில் நடந்து முடிந்த (28.04.2022) போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி இருந்தது. இதில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய கொல்கத்தா அணியில், ஷ்ரேயாஸ் ஐயர் 42 ரன்களும், நிதிஷ் ராணா 57 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் சேர்க்காததால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
தொடர் தோல்வியில் KKR..
தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேப்பிடல்ஸும், சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு உருவான வண்ணம் இருந்தது. ஆனால், எளிய இலக்கு என்பதால் டெல்லி அணி வீரர்களான அக்சர் படேல் மற்றும் போவல் ஆகியோர் ஓரளவுக்கு ஆடி ரன் சேர்த்தனர்.
இதில், போவல் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விரட்ட, டெல்லி அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டி இருந்தது. 8 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ், புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மறுபக்கம், 9 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ள கொல்கத்தா, கடைசி 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துள்ளது.
மீண்டும் நடுவரிடம் முறையிட ரிஷப் பண்ட்
மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்தால் மட்டும் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலை, கொல்கத்தா அணிக்கு உருவாகி உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்த போது, ரிஷப் பண்ட் நடுவரிடம் முறையிட்ட சம்பவம், தற்போது அதிகம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 17 ஆவது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் பந்தினை எதிர்கொண்ட நிதிஷ் ராணா, அதனை சிக்சருக்கு அனுப்பினார். தொடர்ந்து, இடுப்பு பகுதிக்கு மேல் சென்றதால், நோ பால் என்றும் நடுவர் அறிவித்தார். இதன் காரணமாக, நடுவர் அருகே நடந்து சென்ற ரிஷப் பண்ட், நோ பால் குறித்து நடுவரிடம் முறையிட்டதாக தெரிகிறது.
நோ பால் சர்ச்சை
ஆனால், இதனை நடுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், ப்ரீ ஹிட்டும் வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நோ பால் பெயரில், கள நடுவர்களிடம் டெல்லி அணியினர் முறையிட்ட சம்பவம், அதிகம் சர்ச்சையை உருவாக்கி இருந்தது.
பேட்டிங் செய்து கொண்டிருந்த டெல்லி வீரர்களை கேப்டன் ரிஷப் பண்ட் அந்த போட்டியின் போதும் வெளியே அழைத்திருந்ததும் பெரிய அளவில் விமர்சனத்தினை உருவாக்க்கி இருந்தது. இதனையடுத்து, தற்போது மீண்டும் நோ பால் தொடர்பாக ரிஷப் பண்ட் நடுவரிடம் பேசிக் கொண்டிருந்த வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
— Addicric (@addicric) April 28, 2022
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்