'நல்ல பேட்ஸ்மேன் தான்...' யாரு இல்லன்னு சொன்னா...? அதுக்காக நல்ல கேப்டனா இருப்பாருன்னு எப்படி சொல்ல முடியும்...? - இந்திய வீரர் குறித்து கபில்தேவ் அதிரடி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 14 சீசன் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் குறித்த விவாதம் எழுந்துள்ளது.

'நல்ல பேட்ஸ்மேன் தான்...' யாரு இல்லன்னு சொன்னா...? அதுக்காக நல்ல கேப்டனா இருப்பாருன்னு எப்படி சொல்ல முடியும்...? - இந்திய வீரர் குறித்து கபில்தேவ் அதிரடி...!

சில வாரங்களுக்கு முன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரரும், டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனுமான ஷ்ரேயஸ் ஐயர் தோள்பட்டையில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவர் அப்போட்டியில் இருந்தும், ஐபிஎல் 14 சீசனிலிருந்து அவர் விலகினார்.

இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு புதுக் கேப்டனை நியமிக்க வேண்டியுள்ளது. மேலும், டெல்லி அணியில் அஜிங்கிய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டீவன் ஸ்மித் போன்ற அனுபவமிக்க கேப்டன்கள் இருந்ததால், இவர்களில் ஒருவர்தான் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைவரும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்லி அணி நிர்வாகமோ இளம் வீரர் ரிஷப் பந்தை நம்பி கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இந்த முடிவு ஒருசில ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில விளையாட்டுகளில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி வந்தாலும், அணியை வழிநடத்தும் ஆற்றல் அவரிடம் இருக்குமா? எனக் கூறிவருகின்றனர்.

இந்த செய்தி குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், சுவாரசியமாகப் பதிலளித்துள்ளார்.

'ரிஷப் பந்த் புதிய கேப்டனாக இருப்பதால் டெல்லி அணிக்குக் கோப்பை பெற்றுக்கொடுக்க 25-26% வாய்ப்புள்ளது. அவர் இப்போதுதான் கேப்டன் பொறுப்பை முதல்முறை ஏற்பதால் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. திறமையான பேட்ஸ்மேன் என்பதற்காக அவர் திறமையான கேப்டனாக இருப்பார் என உறுதியாகச் சொல்ல முடியாது.

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு முதலே ரிஷப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சிக் கோப்பை தொடரில் டெல்லி அணியை வழிநடத்தி உள்ளார். இந்த அனுபவம் ரிஷப்பிற்கு கை கொடுக்காதா? என்ற கேள்வியும் கபில் தேவிடம் கேட்கப்பட்டது.

Rishab pant get the trophy Kapil Dev Action Response

அதற்கு, 'ரஞ்சிக் கோப்பை வேறு, ஐபிஎல் போட்டி வேறு, இது இரண்டையும் ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் திறமைமிக்க, அனுபவமிக்க பல மூத்த வீரர்கள் இருப்பார்கள். அவர்களை அனுசரித்து அணியை வழிநடத்த வேண்டும்.

Rishab pant get the trophy Kapil Dev Action Response

தப்பிதவறி இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தால் பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்கள். இது புதிதாக வரும் கேப்டனுக்கு, கூடுதல் அழுத்தங்கள் ஏற்படுத்தும். இதையெல்லாம் சமாளித்து, மூளையில் வைத்து கொள்ளாமல் தான் நாம் போட்டியை சந்திக்க நேரிடும். நான் இப்போது சிறதளவு பிரச்சனையே சொல்கிறேன், இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளது. இப்படிப்பட்ட சூழல்கள் ரஞ்சிக் கோப்பையில் இருக்காது. இதெற்கெல்லாம் தயாராக தான் ரிஷப் பந்த் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்.

மற்ற செய்திகள்