'ப்ரித்வி ஷா' அவுட்டாகும் முன்... 'ரிக்கி பாண்டிங்' சொன்ன அந்த விஷயம்... "உண்மையாவே நீங்க 'legend' தான்..." வைரலாகும் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டி இன்று ஆரம்பமானது.

'ப்ரித்வி ஷா' அவுட்டாகும் முன்... 'ரிக்கி பாண்டிங்' சொன்ன அந்த விஷயம்... "உண்மையாவே நீங்க 'legend' தான்..." வைரலாகும் 'வீடியோ'!!!

பகலிரவு போட்டியான இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்து வீச்சில் ப்ரித்வி ஷா போல்டானார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், பயிற்சி ஆட்டத்தில் சரியாக ஆடாத ப்ரித்வி ஷா ஏன் அணியில் இடம்பிடித்தார் என அனைவரும் கேள்வி எழுப்பி அணி நிர்வாகம் மீது விமர்சனத்தை முன் வைத்தனர். இதனையடுத்து, இன்று அவர் டக் அவுட்டாகி வெளியேறியதும் ரசிகர்கள், தாங்கள் நேற்று தெரிவித்த கருத்து சரி தான் என்பது போல பதிவிட்டு வருகின்றனர்.ricky ponting predicts prithvi shaw dismissal in commentary

இந்நிலையில், இந்த போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ப்ரித்வி ஷா களமிறங்கிய உடனே அவரது பலவீனம் என்ன என்பதை தெரிவித்திருந்தார். 'ப்ரித்வி ஷா தனது பேட்டிற்கும், பேடிற்கும் இடையே  இடைவெளியை ஏற்படுத்துவார். அதனை பயன்படுத்தி தான் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் விக்கெட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்' என கூறினார். 

 

அதன்படியே, ஒரு சிறிய இடைவெளியை ப்ரித்வி ஷா பயன்படுத்த, ஸ்டார்க் வீசிய பந்து அதன் வழியே ஸ்டம்பை பதம் பார்த்தது. பந்து வீசும் முன்னரே மிகச் சரியாக பாண்டிங், ப்ரித்வி ஷாவின் பலவீனத்தை தெரிவிக்க, அது போலவே அவர் அவுட்டாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் ப்ரித்வி ஷா இடம்பெற்றிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.ricky ponting predicts prithvi shaw dismissal in commentary

மற்ற செய்திகள்