கோபத்துல டிவி ரிமோட்'ட உடைச்சு.. தண்ணி பாட்டில பறக்க விட்ட ரிக்கி பாண்டிங்.. ஹோட்டல் ரூமில் நடந்த சம்பவம்.. காரணம் என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகள் ஆடியுள்ளது.
இதில், 3 போட்டிகள் மட்டுமே வென்றுள்ள டெல்லி, புள்ளிப் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது.
தங்களின் அடுத்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நாளை (28.04.2022) சந்திக்கவுள்ள டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஆடி இருந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று, பெரிய அளவில் சர்ச்சை ஆகி இருந்தது.
நோ பால் சர்ச்சை
ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி வீரர்கள், ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இருந்தாலும் கடைசி கட்டத்தில் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, டெல்லி அணியின் வெற்றிக்கு கடினமான சூழல் உருவானது.
கடைசி ஓவரில், டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட, களத்தில் இருந்த போவல் முதல் மூன்று பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். இதனால், டெல்லி ரசிகர்கள் ஓரளவுக்கு உற்சாகம் அடைந்தனர். அப்படி இருக்கையில் தான், போவல் சிக்சருக்கு அடித்த மூன்றாவது பந்தை கள நடுவர் நோ பால் கொடுக்க மறுத்து விட்டதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியினர் முறையிட்டனர்.
அதே போல, அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர்களை வெளியே வருமாறு அழைத்தார். மேலும், டெல்லி பயிற்சியாளர் ஒருவர் நேரடியாக களத்திற்கு சென்று, நடுவரிடமும் முறையிட்டார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட, விதிகளை மீறியதாக ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த போட்டியில், டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
வெறுப்பில் இருந்த ரிக்கி பாண்டிங்
இந்நிலையில், இந்த போட்டி முழுவதையும் ஹோட்டல் ரூமில் இருந்து பார்த்த போது, டெல்லி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எப்படி இருந்தார் என்பது பற்றி அவரே கருத்து தெரிவித்துள்ளார். ரிக்கி பாண்டிங்கின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்ததால், ஐந்து நாட்கள் தனிமையில் இருந்தார். இதனால், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது, ரிக்கி பாண்டிங் மைதானத்திற்கு வரவில்லை.
அறையில் இருந்து அந்த போட்டியை பார்த்தது பற்றி பேசிய ரிக்கி பாண்டிங், "அறையில் இருந்து போட்டியை பார்க்க மிகவும் வெறுப்பாக இருந்தது. அப்போது கோபத்தில் மூன்று முதல் நான்கு டிவி ரிமோட்களையும், சில தண்ணீர் பாட்டில்களையும் சுவற்றில் தூக்கி எரிந்து உடைத்து விட்டேன். ஒரு அணியின் பயிற்சியாளராக இருந்து கொண்டு, நீங்கள் மைதானத்தில் இல்லை என்றால், அது உங்களுக்கு அதிக வெறுப்பை உருவாக்கும்.
மீண்டு வருவோம்ன்னு நம்பிக்கை இருக்கு..
ஒவ்வொரு ஓவரின் போதும், அதை செய்யுங்கள் இதை செய்யுங்கள் என நான் அங்கிருந்தவர்களுக்கு மெசேஜ் செய்து கொண்டே இருந்தேன். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடி போட்டியை எங்கள் பக்கம் திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐந்து நாட்கள் உள்ளே இருந்து விட்டு, தற்போது மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளது, நிம்மதியாக இருப்பதாக உணர்கிறேன். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், சில விஷயங்கள் சரியாக போகவில்லை. கடைசியில் சில விஷயங்களும் அரங்கேறி இருந்தது" என தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்