Udanprape others

பார்த்து பேசுங்க கெயில்...! 'அவரும்' உங்கள மாதிரி 'சாதனை' செய்தவர் தான்...! 'அவரோட' வார்த்தைக்கு ரெஸ்பெக்ட் கொடுங்க...! - தொடரும் மோதல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி-20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மே.இ. தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார்.

பார்த்து பேசுங்க கெயில்...! 'அவரும்' உங்கள மாதிரி 'சாதனை' செய்தவர் தான்...! 'அவரோட' வார்த்தைக்கு ரெஸ்பெக்ட் கொடுங்க...! - தொடரும் மோதல்...!

ஆயினும் சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாததால் மே.இ. அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஆம்ப்ரோஸ் தெரிவித்திருந்தார். 

Richards advises Gayle take Ambrose's criticisms seriously

ஆம்ப்ரோஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கெயில் கூறுகையில், ஆம்ப்ரோஸ் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தேன். என்னைப் பற்றி தேவை இல்லாமல் விமர்சனம் செய்து வருகிறார் ஆம்ப்ரோஸ். கவனத்துக்காகச் செய்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவருக்கு இதன்மூலம் கவனம் கிடைக்கிறது. அதனால் அவர் ஆசைப்படும் கவனத்தை நானும் திருப்பித் தர விரும்புகிறேன்.

Richards advises Gayle take Ambrose's criticisms seriously

ஆம்ப்ரோஸ் மீது இப்போது எந்த மரியாதையும் கிடையாது. எப்போது நான் அவரைக் கண்டாலும் அணியைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை நிறுத்தவும், அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று தான் கூறுவேன். மற்ற அணிகளில் முன்னாள் வீரர்கள் அவர்களுடைய அணிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதேப்போன்று டி-20 உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டியில் எங்களுக்கு ஏன் முன்னாள் வீரர்கள் ஆதரவளிக்கக் கூடாது?

Richards advises Gayle take Ambrose's criticisms seriously

டி20 உலகக் கோப்பையை நாங்கள் இருமுறை வென்றுள்ளோம். இந்தமுறை கோப்பையைத் தக்கவைக்க முயல்கிறோம். முன்னாள் வீரர்களின் எந்தக் கருத்துகளையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கெய்ல் - ஆம்ப்ரோஸ் இடையிலான கருத்து மோதலைச் சமாதானம் செய்துவைக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

தன்னுடைய கருத்தைக் கூற ஆம்ப்ரோஸுக்கு முழு உரிமை உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கெய்ல் அளவுக்கு ஆம்ப்ரோஸும் சாதனை புரிந்தவர் தான். அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து கருத்து வரும்போது அதை நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும். நான் கெய்லாக இருந்திருந்தால் என்ன சாதிக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்துவேன். ஏனெனில் ஆம்ப்ரோஸ் மட்டுமல்ல இன்னும் பல பேருக்கு கெய்ல் மீது விமர்சனங்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்