2022 ஐபிஎல்-ல 'யாரெல்லாம்' தக்க வைக்கப்படுறாங்க...? ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் 'எத்தனை கோடிக்கு' ஏலம் போயிருக்காங்க...?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வரும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் வீரர்களை தக்கவைத்து கொள்ள ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களின் ஏலப்பட்டியல் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஐபிஎல்-ல 'யாரெல்லாம்' தக்க வைக்கப்படுறாங்க...? ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் 'எத்தனை கோடிக்கு' ஏலம் போயிருக்காங்க...?

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த சில மாதங்களுக்குள் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஐபிஎல் போட்டியில் இருக்கும் அணிகள் தங்கள் அணிகளில் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

மேலும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் அணிகள் 4 வீரர்களில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்கள் மற்றும் குறைந்தபட்சமாக ஒரு அயல்நாட்டு வீரரை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

இல்லையேல் 2 இந்திய வீரர்கள் + 2 அயல்நாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் + 1 அயல்நாட்டு வீரர் என்ற ரீதியில் தக்கவைத்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

அதோடு அவ்வாறு தேர்ந்தெடுக்கும் வீரர்களின் ஊதியங்களை பிசிசிஐ-யே நிர்ணயித்துள்ளது. அந்த பட்டியலில் முதன்மை வீரருக்கு ரூ.16 கோடி எனவும்,  2வது வீரருக்கு ரூ.12 கோடியாகவும், 3வது வீரருக்கு ரூ.8 கோடியும், 4வது வீரருக்கு ரூ.6 கோடியும் ஊதியமாக வழங்க வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது.

இதில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட அணிகள் 4 வீரர்களை தேர்வு செய்தநிலையில் பஞ்சாப் அணி ஒரு வீரரை கூட தக்கவைக்க விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதில் மும்பை அணி முதன்மை வீரர்கள் ரோஹித் சர்மாவை 16 கோடிக்கும், இரண்டாவது வீரராக ஜாஸ்ப்ரிட் புர்மாவை 12 கோடிக்கும், சூர்யகுமார் யாதவை 8 கோடிக்கும், பொல்லார்ட்டை 6 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.

Retention of players in the 2022 IPL series for all teams

ராயல் சலேன்ஜ்ர் பெங்களூரு அணி மூன்று வீரர்களை தக்கவைத்துள்ளது. அதில் முதன்மை வீரர்கள் விராட் கோலியை 15 கோடிக்கும், இரண்டாவது வீரராக மக்ஸ்வெல்லை 11 கோடிக்கும், சிராஜ்ஜை 7 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.

Retention of players in the 2022 IPL series for all teams

RETENTION, IPL SERIES

மற்ற செய்திகள்