‘இதனால்தான் ஐபிஎல் கோப்பை ஜெயிச்ச கையோடு’... ‘ஆஸ்திரேலியா செல்லாமல்’... ‘ அந்த சீனியர் வீரர் மும்பை திரும்பினாரா’???... ‘வெளியான அதிர்ச்சி தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, தனது தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தான், துபாயில் இருந்து நேரடியாக  இந்தியா திரும்பினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘இதனால்தான் ஐபிஎல் கோப்பை ஜெயிச்ச கையோடு’... ‘ஆஸ்திரேலியா செல்லாமல்’... ‘ அந்த சீனியர் வீரர் மும்பை திரும்பினாரா’???... ‘வெளியான அதிர்ச்சி தகவல்’...!!!

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரின் போது தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் முழுமையாக குணமடைந்தாரா, இல்லையா என்றே தெரியாத நிலையில், ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்றார்.

ஆனால் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ முதலில் சேர்க்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது. அப்போது, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவர், 75 சதவிகித உடற்தகுதியுடன் மட்டுமே இருக்கிறார் என்று கூறினார். பெங்களூரு கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிபெற்று, முழு உடற்தகுதி அடைந்ததும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணியுடன் செல்லாமல், மும்பை அணிக்காக விளையாடி 5-வது கோப்பை வென்று தந்த கையோடு, துபாயில் இருந்து,  மும்பை திரும்பினார் ரோகித் சர்மா. பின்பு அவர் பிட்னஸ் பயிற்சிக்காக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அணிக்கு சென்றார். அங்கு ராகுல் டிராவிட் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் ரோகித் சர்மா.

Report: Rohit returned to Mumbai as his father had contracted COVID-19

இந்நிலையில் தனது தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாலேயே, அவரை காண, ரோகித் சர்மா இந்தியா திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க விருப்பம் இருந்தும், காயம் மற்றும் தந்தை கொரோனா பாதிப்பு காரணங்களால் அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியாத நிலை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ‘ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலியா செல்லும் எண்ணம் இல்லை என்பது தவறு. தனது தந்தையை காண  மும்பை வந்துள்ளார். அதன்பின் டெஸ்ட் தொடரில் பங்கேற்க விருப்பம் இல்லை என்றால் மும்பையிலிருந்து ஏன் பெங்களூரு சென்று பயிற்சியில் ஈடுபட்டார். அவருக்கு விருப்பம் இருந்தும் உடற்தகுதியே முக்கிய காரணமாக இருக்கிறது’ என்று அவருக்கு ஆதரவாக சிலர் கூறி வருகின்றனர்.

முழுமையாக தேறியபின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா திட்டமிட்டு இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஆனால் உடல் தகுதி பெற ஏற்படும் தாமதம் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில், ரோகித் சர்மா களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தனக்கு தெரியவில்லை, ஆனாலும், எந்த ஆர்டரில் களம் இறக்கினாலும் விளையாடத் தயார் என ரோகித் சர்மா கடந்த சில நாட்கள் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்