RRR Others USA

"கணக்கு கரெக்ட்டா இருக்கா கண்ணுங்களா?.." சொல்லி அடித்த 'தமிழக' கில்லி.. தினேஷ் கார்த்திக் அதிரடிக்கு பின்னால் உள்ள சபதம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், தற்போது இந்தியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், அனைத்து போட்டிகளும் மிகவும் அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது.

"கணக்கு கரெக்ட்டா இருக்கா கண்ணுங்களா?.." சொல்லி அடித்த 'தமிழக' கில்லி.. தினேஷ் கார்த்திக் அதிரடிக்கு பின்னால் உள்ள சபதம்?

இரண்டு புதிய அணிகள் காரணமாக, மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருவதால், தலா ஐந்து அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி இருந்தன.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 128 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணி, சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. இதனால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க, போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

மேட்ச் பினிஷர் தினேஷ் கார்த்திக்

கடைசி ஓவரில், பெங்களூர் அணியின் வெற்றிக்கு, 7 ரன்கள் தேவைப்பட, முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரி என அடுத்தடுத்து விரட்டி, ஆர்சிபியின் முதல் வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்ய வைத்தார் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூர் அணி மோதிய முதல் போட்டியில், 14 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களை எடுத்து அவர் அதிரடி காட்டி இருந்தார்.

பாராட்டிய கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்

தொடர்ந்து, இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, மேட்ச் பினிஷராக மாறியுள்ள தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர், பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். பெங்களூர் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூட, நேற்றைய போட்டிக்கு பிறகு, தோனியை போல தினேஷ் கார்த்திக் கூலாக ஆடுவதாக குறிப்பிட்டிருந்தார்.

சொல்லி சொல்லி அடிக்குறாரு..

இந்நிலையில், ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக, தினேஷ் கார்த்திக் பேசி இருந்த விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு என்னால் கிரிக்கெட் ஆட முடியும் என்றும், ஐபிஎல் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி, மீண்டும் டி 20 இந்திய அணியில் திரும்புவதை குறிக்கோளாக வைத்திருப்பதாகவும் தினேஷ் கார்த்திக் குறிப்பிட்டிருந்தார். அதே போல, வயது ஒரு தடை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அப்படி மட்டும் நினைக்காதீங்க..

அவர் சொன்னது போலவே, இரண்டே போட்டியில் தனது மிடில் ஆர்டர் பேட்டிங்கை அசத்தலாக கையாண்டுள்ள தினேஷ் கார்த்திக், இனி வரும் போட்டிகளில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம், பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தினேஷ் கார்த்திக் குறித்து செய்துள்ள ட்வீட்டும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. "தினேஷ் கார்த்திக் முடிந்து விட்டார் என ஒரு போதும் நினைக்க வேண்டாம்" என குறிப்பிட்டுள்ளார்.

பலரும் தினேஷ் கார்த்திக் வயது பற்றி கவலைப்படும் நிலையில், அவர் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறார் என்பதை தான் ஹர்ஷா போக்லே ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

DINESHKARTHIK, FAF DU PLESSIS, HARSHA BHOGLE, IPL 2022, RCB, INDIAN TEAM, ஆர்சிபி, தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்