'எப்படிங்க, சொல்லி வச்ச மாதிரி...' அன்னைக்கு 'என்ன' நடந்துச்சோ 'அதேப்போல' நடந்துருக்கு...! 'அதுவும் 14 வருஷம் கழிச்சு அதே நாள்ல...' - வியப்பில் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று (24-09-2021) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கும், 2007-ஆம் ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பை தொடருக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல்-ன் 36-வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டது.
இந்நிலையில், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்களில் 156 ரன்களை எடுத்தது. ஆர்சிபி அணி சுமார் 13 ஓவர்களில் 110 ரன்களை எடுத்த நிலையில், அதன் பின் சி.எஸ்.கே அணி கேப்டன் 'தல' தோனி செய்த சில மாற்றங்களால் ஆர்சிபி அணி அதற்கு அடுத்ததாக மளமளவென விக்கெட்டுகளை கோட்டை விட்டது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சி.எஸ்.கே ரசிகர்களின் சிம்ம சொப்பனமாக திகழும் கேப்டன் தோனி, சில கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினாலும், இன்றளவும் அவரின் திட்டங்கள் கிரிக்கெட்டை ஆளுகிறது.
அதுமட்டுமில்லாமல், நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணியின் ஐபிஎல் போட்டி தொடரையும், கடந்த 2007-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் டி-20 இறுதிப் போட்டியில் மோதிகொண்டன. அப்போது, இந்திய அணியின் புதிய கேப்டனாக தோனி பொறுப்பேற்று இருந்தார்.
ஆட்டத்தின் இறுதி வரை பாகிஸ்தான் பக்கமே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. கடைசி ஒவரில் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக் சில நிமிடங்கள் இந்திய ரசிகர்களின் மூச்சை நிறுத்தி வைத்திருந்தார் என்றே கூறலாம்.
சிக்ஸர் செல்ல வேண்டிய பந்து ஒரு நிமிடத்தில் ஆட்டத்தையே மாற்றி அமைத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பியது.
இந்நிலையில் டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கும் சில சுவாரஸ்யமான ஒற்றுமைகள் நடந்துள்ளது. அது என்னவென்றால் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு தோனி தலைமையில் இந்திய அணி டார்கெட்டாக வைத்த ரன்கள் 157.
அதேபோல் தான் நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணிக்கு தோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அணி 157 ரன்கள் எடுத்து வெற்றியை கண்டது.
டி-20 உலகக்கோப்பையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் தோனி அனுபவம் இல்லாத பவுலருக்கு வாய்ப்பு கொடுத்து தேர்டுமேன் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்த் கையில் கேட்ச் பிடித்தார்.
அதேப்போன்று நேற்றைய போட்டியில் ஆர்சிபி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டிற்கே 110 ரன்களை சேர்த்திருந்தாலும், ஃபார்ம் அவுட் எனக்கூறப்பட்ட பிராவோவுக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்டத்தையே மாற்றி அமைத்தார்.
சுமார் 14 ஆண்டுகள் ஆனாலும் 'தல' தோனியின் கிரிக்கெட் நுணுக்கங்களும், செயல்பாடுகளும் மற்றும் கேப்டன்சி திட்டங்கள் இன்னும் வயசாகாமல் வொர்க் அவுட்டாகிறது என ரசிகர்கள் உச்சிமுகர்ந்து பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்