VIDEO: அடக்கடவுளே!'.. அவுட்டானதும் வானத்தைப் பார்த்து கோலி செஞ்ச வைரல் செயல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டான சோகத்தில் பெவிலியன் திரும்பிய விராட் கோலியின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

VIDEO: அடக்கடவுளே!'.. அவுட்டானதும் வானத்தைப் பார்த்து கோலி செஞ்ச வைரல் செயல்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய 60-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 70 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 66 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்டு 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். இதில் முதல் பந்து முதலே பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி விராட் கோலி நம்பிக்கை கொடுத்தார்.

ஆனால் ரபாடா வீசிய 3-வது ஓவரில் விராட் கோலி 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் 2-வது பந்தை விராட் கோலி கட் ஷாட் ஆட முயன்றார். ஆனால் பந்து ராகுல் சஹாரிடம் கேட்ச் ஆனது. இதற்கு கள அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். அதனால் பஞ்சாப் அணி மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ கேட்டது.

முதலில் பந்து பேட்டில் படவில்லை என்ற காரணத்திற்காக நாட் அவுட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாம் அம்பயர் ரிவியூவில் பார்த்த போது, பந்து பேட்டில் எட்ஜானது தெரியவந்தது. இதனால் விராட் கோலி அவுட் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விராட் கோலி, கைகளை வானத்தை நோக்கி தூக்கி கடவுளிடம் அதிருப்தி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்போட்டியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே பெங்களூரு அணி எடுத்தது. அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8

VIRATKOHLI, RCB, IPL, PBKS

மற்ற செய்திகள்