''சிஎஸ்கே'-க்கு ஒரு ஜாதவ்... ஆர்சிபி-க்கு 'நான்'!'.. 'டெஸ்ட் மேட்ச் ஆட வேண்டியவர... ஐபிஎல் இறக்கிவிட்டுட்டீங்களே பா!'.. ஆர்சிபி பேட்டிங்கில் சொதப்பியது எப்படி?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடுகின்றன.

''சிஎஸ்கே'-க்கு ஒரு ஜாதவ்... ஆர்சிபி-க்கு 'நான்'!'.. 'டெஸ்ட் மேட்ச் ஆட வேண்டியவர... ஐபிஎல் இறக்கிவிட்டுட்டீங்களே பா!'.. ஆர்சிபி பேட்டிங்கில் சொதப்பியது எப்படி?

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து, பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர்.

படிக்கல் 8 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.

தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 7 ரன்களில் வெளியேற பவர் பிளே ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்.சி.பி.

டிவில்லியர்ஸும், ஜோஷ் பிலிப்பும் இன்னிங்ஸை ஸ்டெடி செய்ய முயன்றனர். எனினும், அந்த முயற்சியில் தோல்வியை தழுவினர்.

இதற்கிடையே, குர்கீரட் சிங் மிகவும் பொறுமையாக ஆடி, பந்துகளை வீணாக்கி, கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சீசனில், சிஎஸ்கே-வின் ஜாதவ் ஆடுவது போல், ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் ஆடிய அவர், 24 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்தார்.

 

மற்ற செய்திகள்