பேர மாத்துறோம், 'கப்ப' ஜெயிக்குறோம்... களத்தில் குதித்த 'பிரபல' அணி... கண்ணாடிய திருப்புனா 'ஆட்டோ' எப்டி?... ஷிப்ட் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் இந்தமுறை எப்படியாவது கப்பை ஜெயிக்க வேண்டும் என்று போட்டிபோட்டு தீயாக வேலை செய்து வருகின்றன. குறிப்பாக இதுவரை கப்பை வெல்லாத பெங்களூர், டெல்லி பஞ்சாப் அணிகளுக்கு இது மிகப்பெரிய கவுரவப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
இதனால் அந்த அணிகள் கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து வெளிநாட்டு வீரர்களை மொத்தமாக வளைத்துப்போட்டு இருக்கின்றன. இதுதவிர பல்வேறு வழிகளிலும் கப்பை வெல்வதற்கான ஆயத்தங்களை அந்த அணிகள் செய்து வருகின்றன. இதனால் இந்தமுறை ஐபிஎல் போட்டிகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி திடீரென தன்னுடைய சமூக வலைதளங்களில் இருந்து லோகோவை அகற்றியது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று இருந்த பெயரை வெறும் ராயல் சேலஞ்சர்ஸ் என்று வைத்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் எதற்காக இப்படி? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தன்னிடம் கூட சொல்லாமல் பெங்களூர் அணி இவ்வாறு செய்திருப்பதாக கோலியும் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கிடையில் பெங்களூர் அணி தங்களது பெயர் மற்றும் லோகோவை மாற்ற இருப்பதாகவும் வருகின்ற 16-ம் தேதி இதுகுறித்து அந்த அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்டி ஜீவா ஓடும்? என்று மீம்ஸ் போட்டு அந்த அணியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணி தன்னுடைய பெயரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் என்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தன்னுடைய பெயரை டெல்லி கேபிடல்ஸ் என்றும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
@RCBTweets DP change kyu bhai, rehnede. Usse trophy nhi jeeththe. pic.twitter.com/JG8YGiE0WH
— Riya Choudhary (@RiyaCho38687320) February 13, 2020
— Vignesh.S (@vigneshs9788) February 13, 2020
Kannadiya thirupina eppudi jeeva auto odum.. 😂 pic.twitter.com/AVMjeOs3Ll
— Billa Ranga Baatsha (@Bala_Krish_07) February 13, 2020
— Steven Ram 7747😎😎 (@SathyaN37680837) February 13, 2020