மறக்க முடியுமா? 11 வருசம் முன்னாடி இதே நாள்.. WORLD CUP-ல AB டிவில்லியர்ஸ் செஞ்ச தரமான சம்பவம்.. RCB-ன் தெறி ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் பற்றி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று போட்ட ட்வீட் தான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடையே ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.
ஏபி டிவில்லியர்ஸ்
2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடினார் ஏபி டிவில்லியர்ஸ். ஆரம்பத்தில் பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இவர் அதன்பின்னர் பவுலர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். வீசப்படும் பந்துகளை கிரவுண்டின் அனைத்து திசைகளிலும் தெறிக்க விடுவதால் இவரை கிரிக்கெட் ரசிகர்கள் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கிறார்கள். விக்கெட் கீப்பராக அறியப்படும் டிவில்லியர்ஸ் ஆரம்பத்தில் பவுலிங்கும் போட்டிருக்கிறார்.
இதுவரையில் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9577ரன்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும் 53 அரை சதங்களும் அடக்கம். 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய டிவில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். முதலில் டெல்லி அணிக்காக விளையாடிய இவர் பின்னர் 2011 ஆம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெரும் வரையில் அதே அணியில் நீடித்தார். இதனால் பெங்களூரு அணியின் செல்லப் பிள்ளை என்றே கிரிக்கெட் ரசிகர்கள் டிவில்லியர்ஸை குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு இதே தேதியில் டிவில்லியர்ஸ் ஆடிய ருத்ரதாண்டவ ஆட்டம் குறித்து ட்வீட் ஒன்றினை போட்டிருக்கிறது பெங்களூரு அணி.
ருத்ரதாண்டவம்
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை நாம் யார் தான் மறக்க முடியும்? 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பையை தட்டித் தூக்கிய ஆண்டு அது. அந்தத் தொடரில் 'க்ரூப் பி' யில் இடம் பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா இதே நாளில் (மார்ச் 3) நெதர்லாந்த்தை எதிர்கொண்டது. மொஹாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க வீரர்கள், நெதர்லாந்து பவுலர்களை திணறடித்தனர் என்றே சொல்ல வேண்டும். ஹாசிம் ஆம்லா 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து பொறுப்பை கையில் எடுத்த டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி 134 (98) ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் அந்த அணி 351 ரன்களை குவித்தது. எதிர்பார்த்ததை போலவே அப்போட்டியில் தென்னன்னாப்பிரிக்க அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்த டிவில்லியர்ஸை குறிப்பிட்டு பெங்களூரு அணி செய்த ட்வீட் தற்போது வைரலாக பரவிவருகிறது.
மற்ற செய்திகள்