Beast BNS

RCB ஸ்டார் ப்ளேயர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்.. MI-க்கு எதிரான மேட்ச் முடிஞ்சதும் வந்த சோக செய்தி.. அவசர அவசரமாக வீட்டுக்கு போகும் வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலில் சகோதரி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RCB ஸ்டார் ப்ளேயர் வீட்டில் நடந்த துக்க சம்பவம்.. MI-க்கு எதிரான மேட்ச் முடிஞ்சதும் வந்த சோக செய்தி.. அவசர அவசரமாக வீட்டுக்கு போகும் வீரர்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்கொண்டது. இப்போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்த்தி வெற்றி பெற்றது. இதில் சிறப்பாகப் பந்துவீசிய பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், இப்போட்டி முடிவடைந்த பின்னர் ஹர்சல் படேலின் சகோதரி உயிரிழந்த தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து, ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திலிருந்து அவர் வெளியேறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என சொல்லப்படுகிறது.

RCB pacer Harshal Patel leaves for home after his sister dies

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹர்ஷல் படேல் 4 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரி 14.66. எகானமி 5.50. அதேபோல் புள்ளிப்பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ், விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 3-வது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

RCB, IPL, MUMBAI-INDIANS, HARSHALPATEL

மற்ற செய்திகள்