IPL 2022: எங்க டீம்ல 11 பேர் இல்ல 12 பேர்… செம்மயான அறிவிப்பை வெளியிட்ட RCB

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடர்  மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான கால அட்டவணை சமீபத்தில் வெளியானது.  இதற்காக எல்லா அணிகளும் தயாராகி வருகின்றன.

IPL 2022: எங்க டீம்ல 11 பேர் இல்ல 12 பேர்… செம்மயான அறிவிப்பை வெளியிட்ட RCB

மோதிரம் மாற்றி முத்தம் கொடுத்து கொண்ட மேக்ஸ்வெல் ஜோடி! இணையத்தை கலக்கும் திருமண புகைப்படம்

கோலியின் தலைமையில் RCB

2014 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பைப் பெற்ற கோலி 7 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை விராட் கோலி வழிநடத்தினார். இருப்பினும் அந்த அணி ஐபிஎல் கோப்பையை இதுவரையில் வாங்காததால் அதற்கு பொறுப்பேற்று அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் கோலி. பல முறை ப்ளே ஆஃப்க்கு சென்ற போதும், சில முறை பைனலுக்கே சென்ற போதும் இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். ஆனால் கடைசி வரை ஆர் சி பி அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது.

RCB officially announced AB devilliers as their mentor

மிஸ்டர் கிரிக்கெட்டின் ஓய்வு…

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வை அறிவித்துவிட்டு, ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த டிவில்லியர்ஸ், கடந்த ஆண்டு முதல் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆர் சி பி அணியின் தூண்களில் ஒருவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த டிவில்லியர்ஸ் இல்லாமல் இந்த ஆண்டு அந்த அணி விளையாட உள்ளது.

RCB officially announced AB devilliers as their mentor

கோலிக்குப் பிறகு டு பிளஸ்சி

கோலியின் ராஜினாமாவுக்கு பிறகு புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டு பிளஸ்சி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தியுள்ளார். அதுபோலவே ஐபிஎல் தொடரில் நான்கு முறைக் கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்துள்ளார்.  37 வயதாகும் டு பிளஸ்சியின் தலைமையில் இந்த ஆண்டு ஐபில் தொடரை எதிர்கொள்கிறது RCB.

RCB officially announced AB devilliers as their mentor

மீண்டும் அணிக்குள் வந்த டிவில்லியர்ஸ்

இந்நிலையில் நீண்ட காலமாக அணிக்குள் இருந்து ஓய்வு பெற்ற வீரரான டிவில்லியர்ஸை தங்கள் அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது ஆர்சிபி அணி நிர்வாகம். இது சம்மந்தமான அறிவிப்போடு ‘ஏ பி டிவில்லியர்ஸ் அணியோடு தன் பயணத்தை தொடர்கிறார். ஆர்சிபியின் ஆலோசகராக… 12 பேர் கொண்ட ஆர்மி’ எனக் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு ஆர் சிபி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியையும் இந்த ஆண்டு கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையும் கொடுத்துள்ளது.

பைக்கில் வந்த ஜோடி.. சென்டர் மீடியனில் மோதி சோகம்.. இளைஞர் பலி, இளம் பெண் கவலைக்கிடம்..

CRICKET, RCB, AB DEVILLIERS, MENTOR, IPL, IPL 2022, VIRAT KOHLI, ஐபிஎல் தொடர், விராட் கோலி, ராயல் சேலஞ்சர்ஸ்

மற்ற செய்திகள்