Beast BNS

VIDEO: ‘ப்பா.. என்ன டைவ்’.. விளையாடிய முதல் மேட்சே வேறலெவல் சம்பவம் பண்ணிய மேக்ஸ்வெல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் மேக்ஸ்வெல் செய்த ரன் அவுட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

VIDEO: ‘ப்பா.. என்ன டைவ்’.. விளையாடிய முதல் மேட்சே வேறலெவல் சம்பவம் பண்ணிய மேக்ஸ்வெல்..!

ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் மேக்ஸ்வெல் நேற்று தனது முதல் போட்டியில் விளையாடினார்.

முதல் போட்டியிலேயே ஃபீல்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதில் போட்டியின் 10-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தை திலக் வர்மா அருகில் அடித்துவிட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். ஃபீல்டர்கள் தூரத்தில் இருந்ததால் ரன் ஓடிவிடலாம் என நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேக்ஸ்வெல் மிகவும் வேகமாக ஓடி வந்து டைவ் அடித்து பந்தை ஸ்டம்பை நோக்கி வீசினார். இதனால் திலக் வர்மா ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார்.

இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதனை அடுத்து வந்த பொல்லார்டும் டக் அவுட், ராமந்தீப் சிங் 8 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். திலக் வர்மாவின் விக்கெட்டால் 50-1 என இருந்த மும்பை அணியின் ஸ்கோர், 79 - 6 என பரிதாபமான நிலைக்கு சென்றது. அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மட்டும் தனி ஆளாக 68 ரன்களை விளாசினார். இதனால் 151 என்ற ஸ்கோரை மும்பை அணி அடைந்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 18.3 ஓவர்களில்152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அனுஜ் ராவத் 66 ரன்களும், விராட் கோலி 48 ரன்களும் எடுத்தனர். அதேபோல் இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்து மும்பை அணி பரிதாப நிலையில் உள்ளது.

RCB, MUMBAI-INDIANS, IPL, MAXWELL

மற்ற செய்திகள்