பாவங்க மனுசன்.. ஐபிஎல்-ல அறிமுகமான ‘முதல்’ மேட்ச்லயே இப்படியா நடக்கணும்.. சோகமாக வெளியேறிய ‘RCB’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் போட்டியின், முதல் பந்திலேயே பெங்களூரு அணி வீரர் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் (IPL) லீக் போட்டி நேற்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கோலியும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர்.
அப்போது பிரஷித் கிருஷ்ணா வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி விராட் கோலி (5 ரன்கள்) வெளியேறினார். இதனை அடுத்து தேவ்தத் படிக்கலும் (22 ரன்கள்) ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத்தும் 16 ரன்களில் அவுட்டானார். இதனால் 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பெங்களூரு அணி பறிகொடுத்தது.
இந்த இக்கட்டான சமயத்தில் மேஸ்வெலும், ஏபி டிவில்லியர்ஸும் களமிறங்கினர். இதில், தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ஏபி டிவில்லியர்ஸ் அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து வருண் சக்கரவர்த்தி வீசிய 12-வது ஓவரின் 4-வது பந்தில் மேக்ஸ்வெல் (10 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.
இதற்கு அடுத்த பந்தில் ஹசரங்கா எல்பிடபுள்யூ ஆகி ஆட்டமிழந்தார். இது அவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் அறிமுகமாகி போட்டியாகும். அப்படி இருக்கையில் தான் விளையாடிய முதல் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டாகி சோகமாக வெளியேறினார்.
Wanindu Hasranga IPL Debut Innings#WaninduHasranga #IPL2021 #KKRvRCB pic.twitter.com/snZuMjejyN
— Shubham Sharma (@Shubham73106588) September 20, 2021
முன்னதாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் திடீரென விலகினர். அதனால் அவர்களுக்கு பதிலாக இலங்கை வீரர்களான ஹசரங்கா (Hasaranga) மற்றும் துஷ்மந்த சமீரா (Dushmantha Chameera) ஆகிய இரண்டு வீரர்களை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பெங்களூரு அணி இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 94 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மன் கில் 48 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 41 ரன்களும் எடுத்தனர்.
மற்ற செய்திகள்