ஐபிஎல் வரலாற்றில் வித்தியாசமான சாதனை.. ‘முதல்ல முகமது சிராஜ்.. இப்போ ஹர்ஷல் படேல்’.. அசத்தும் RCB வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் வித்தியாசமான சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 6-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் 25 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியை பொறுத்தவரை ஹசரங்கா 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக பந்துவீசிய பெங்களூரு அணியின் ஹசரங்காவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல், அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜின் சாதனையை முறியடித்துள்ளார். அதில் இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஹர்ஷல் படேல் தொடர்ந்து 2 மெய்டின் ஓவர்களை வீசினார். அதுமட்டுமல்லாமல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து. ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு முகமது சிராஜ், தொடர்ந்து 2 மெய்டின் ஓவர்களை வீசி அசத்தி இருந்தார். தற்போது அந்த சாதனையை ஹர்ஷல் படேல் முறியடித்துள்ளார்.
மற்ற செய்திகள்