"'ஈ சாலா கப் நம்தே' ன்னு சுத்திட்டு இருந்த, RCB 'ஃபேன்ஸ்' தான் இப்போ பாவம்.." 'இர்பான் பதான்' சொன்ன 'விஷயம்'.. "இருக்குற சோகத்துல இது வேறயா??.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட சில அணிகளைச் சேர்ந்த வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

"'ஈ சாலா கப் நம்தே' ன்னு சுத்திட்டு இருந்த, RCB 'ஃபேன்ஸ்' தான் இப்போ பாவம்.." 'இர்பான் பதான்' சொன்ன 'விஷயம்'.. "இருக்குற சோகத்துல இது வேறயா??.."

கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை வேறு ஏதேனும் நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, பாதி லீக் சுற்றின் முடிவில், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 7 போட்டிகள் விளையாடி, ஐந்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத பெங்களூர் அணி, இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசுர பலத்துடன் விளங்கியது. கடந்த பல சீசன்களில் ஒரு அணியாக, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வந்த பெங்களூர் அணி, இந்த முறை நல்ல பார்மில் இருந்ததால் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. இதன் காரணமாக, அந்த அணியின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

அப்படிப்பட்ட நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, மற்ற அணிகளின் ரசிகர்களை விட, பெங்களூர் ரசிகர்களை சற்று வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பெங்களூர் அணி குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan) பேசுகையில், 'ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால், பெங்களூர் அணியின் ரசிகர்களுக்கு தான் அதிக ஏமாற்றமாக இருக்கும். டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருந்தனர். அந்த அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக இந்த சீசனின் சிறந்த அணியாக பெங்களூர் அணி வலம் வந்தது. இதன் காரணமாக, அந்த அணியின் ரசிகர்களும் 'ஈ சாலா கப் நம்தே' என மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். எனவே, அவர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன். ஆனால், இதுவரை நடந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், பெங்களூர் அணிக்கு இது சிறந்த ஆண்டாகவே அமைந்துள்ளது.

இந்த சீசனைப் பொறுத்தவரையில், பேட்ஸ்மேன் கோலியை விட, கேப்டன் கோலி தான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்திருப்பார். ஏலத்தில் அந்த அணி கடினமாக உழைத்து, சரியான வீரர்களைத் தேர்வு செய்தனர். மொத்த அணியும் சிறப்பாக பங்காற்றியிருந்தது' என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்