ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.. மேட்ச் தோத்தாலும் கெத்தான சாதனை படைத்த RCB கேப்டன்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும் ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் ஒரு சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் 2-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் டு பிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் மற்றும் பானுகா ராஜபக்சே ஆகியோர் தலா 43 ரன்களும், மயங்க் அகர்வால் 32 ரன்களும் எடுத்தனர். போட்டியின் கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ஷாருக்கான் மற்றும் ஒடியன் ஸ்மித் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஷாருக்கான் 20 பந்துகளில் 24 ரன்களும், ஒடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் இப்போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அதிக ரன்கள் (88) அடித்த கேப்டன் என்ற பெருமையை டு பிளசிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு எந்த ஒரு வீரரும் இந்த சாதனையை படைக்கவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகினார். இதனை அடுத்து டு பிளசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சிஎஸ்கே அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்