"இவருக்கு எல்லாம் இத்தன 'கோடி'யா??... பெரிய 'ரிஸ்க்'ங்க இது..." 'ஐபிஎல்' அணியை ஓப்பனாக சாடிய 'ஹாக்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளை எதிர்பார்த்து அனைத்து அணிகளின் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்த ஏலத்தில் பேட்ஸ்மேன்களை விட, ஆல் ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கே அதிகம் போட்டி இருந்தது. இதில், ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை அணியில் எடுக்க, பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் கடுமையாக போட்டி போட்டது. இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டே சென்ற நிலையில், இறுதியில் பெங்களூர் அணி அவரை 14.25 கோடிக்கு வாங்கியது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல் (Maxwell), பெரிதாக ரன்கள் அடிக்கவேயில்லை. இதனால், அவரை பஞ்சாப் அணி வெளியேற்றியது. இதனையடுத்து, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்காக, பெங்களூர் அணியில் இணைந்துள்ளார் மேக்ஸ்வெல்.
இந்நிலையில், மேக்ஸ்வெல்லை ஏன் இத்தனை கோடிக்கு எடுத்தீர்கள் என பெங்களூர் அணியிடம், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் (Brad Hogg) கேள்வி எழுப்பியுள்ளார். 'மேக்ஸ்வெல் மொத்தமாக ஆடிய 9 ஐபிஎல் சீசன்களில் இரண்டில் மட்டுமே அவர் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனாலும், அவரை ஏன் இத்தனை பெரிய தொகை கொடுத்து பெங்களூர் அணி வாங்கியுள்ளது என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை. இதன் மூலம், அந்த அணி மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது. மேக்ஸ்வெல் சிறப்பாக ஆட வேண்டுமென இறைவனை தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இது மேக்ஸ்வெல்லின் தவறல்ல. அவர் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் ஏலத்தில் அவரது பெயரை சேர்க்கிறார். இதனால், அவரை போட்டி போட்டு அதிக தொகைக்கு ஐபிஎல் அணிகள் வாங்கிக் கொள்கிறது. இருந்தாலும், மேக்ஸ்வெல்லின் ஆட்டத்திற்காக அதிக தொகை கொடுத்து வாங்குவது என்பது கொஞ்சம் ஓவர் தான்' என மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி எடுத்ததை ஹாக், கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்